கேரள முதல்வர் வி.டி. சதீசனின் பதவியேற்பு விழா மேடையில் முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு இடமளிக்கப்பட்டது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கேரளத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முதல்வராக வி.டி. சதீசன் இன்று (மே 18) காலை பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், இந்த பதவியேற்பு விழா மேடையில் எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இடமளிக்கப்பட்டன.
கேரள காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் இணையவெளியில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வீட்டுக்கு நேரில் சென்று வி.டி. சதீசன் உரையாடி அவரிடம் வாழ்த்து பெற்றார்.
இத்துடன், பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் கா்நாடக முதல்வா் சித்தராமையா, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Summary
The decision to accord a seat to former CM Pinarayi Vijayan on the dais during Kerala CM V.D. Satheesan's swearing-in ceremony has received a warm reception.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பதவியேற்ற முதல் நாளே..! கேரள முதல்வர் சதீசன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

கேரள முதல்வருடன் பதவியேற்கும் 20 அமைச்சர்கள்!
விஜய்க்கு அழைப்பு! கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்!!
பினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

