உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி நிவாரணத்தொகையையும் அறிவித்தார்.
சிசையா-லக்கிம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் ஒன்று லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் திங்கள்கிழமை பத்து பேர் பலியாகினர்.
லக்கிம்பூர் கேரியின் மாவட்ட ஆட்சியர் அஞ்சனி குமார் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், எதிர்திசையில் வந்த லாரியுடன் வேன் மோதியதில், ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, “உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நடந்த விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
பலியான ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து! நிவாரணம் அறிவித்த பிரதமர்

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரணம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



