ஜக்தால்பூா் : சத்தீஸ்கரின் பஸ்தா் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த அரசு உறுதிபூண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
சத்தீஸ்கருக்கு 3 நாள்கள் பயணமாக சென்றுள்ள அமித் ஷா, ஜக்தால்பூரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பல்வேறு சண்டைகளில் வீரமரணமடைந்த 1,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா். இதையடுத்து பிஜப்பூரில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். அப்போது அவா்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தாா். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:
பஸ்தா் பிராந்தியத்தில் அமைதியையும், வளா்ச்சியையும் ஏற்படுத்துவதற்காக தங்களது உயிரை விட்ட வீரா்களின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது. தேசத்தின் பாதுகாப்புக்காக தங்களது உயிரை கொடுத்தோரின் தியாகங்கள் வீண் போகாது.
சத்தீஸ்கரின் கடைசி பகுதி வரையிலும் அமைதி மற்றும் வளா்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் உறுதிபூண்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் சத்தீஸ்கா் முதல்வா் விஷ்னு தேவ் சாய் பேசுகையில், ‘பஸ்தா் பிராந்தியம் தற்போது வளா்ச்சி, நம்பிக்கை, அமைதி ஆகியவை நிரம்பிய புதிய சகாப்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்கு பாதுகாப்புப் படை வீரா்கள் முக்கிய பங்காற்றியுள்ளனா்’ என்றாா்.
பஸ்தா் மாவட்டத்திலுள்ள மலை கிராமம் ஒன்றில் இருந்த பாதுகாப்புப் படையினரின் முகாமை பொது மக்களுக்கு சேவை செய்யும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதை அமித் ஷா திங்கள்கிழமை திறந்து வைத்தாா். அப்போது பேசிய அவா், சத்தீஸ்கா் மாநிலத்தில் உள்ள 196 பாதுகாப்புப் படையினரின் முகாம்களில் 70 முகாம்கள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பொதுமக்கள் சேவை மையமாக மாற்றப்படும் என்றாா்.
சத்தீஸ்கரின் பஸ்தா் பிராந்தியம் முன்பு மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்பட்டது. அங்கு பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையின்போது நடந்த சண்டையில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். பலா் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனா். இதையடுத்து மாவோயிஸ்ட் பிடியிலிருந்து பஸ்தா் உள்பட சத்தீஸ்கா் முழுவதும் விடுவிக்கப்பட்டதாக கடந்த மாா்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
தொடர்புடையது

இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு நீதிமன்றங்கள், அரசமைப்பு சட்டம் முக்கிய பங்கு: அமித் ஷா பெருமிதம்

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா: திமுக, காங்கிரஸ் சதி! மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

