திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

அதிகார அரசியல் மூலம் வளமை மறுசீரமைப்பு: ராணுவ தலைமைத் தளபதி

அதிகார அரசியல் மூலம் வளமையை மறுசீரமைக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

News image

உபேந்திர துவிவேதி

Updated On :20 மே 2026, 1:43 am IST

அதிகார அரசியல் மூலம் வளமையை மறுசீரமைக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, ராணுவத்தின் துல்லியமான செயல்பாடு, பொருளாதார உறுதிப்பாடு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த தேசிய செயல்பாடாக்கியது.

தற்போது ஒழுங்கின்மை, அவநம்பிக்கை, கூட்டணி நாடுகளுக்கு இடையே கருத்து முரண்பாடு என நம்மைச் சுற்றியுள்ள உலகம் சிக்கலான சமிக்ஞையை காட்டுகிறது.

அதிகார அரசியலை ஒழிக்கும் வளமையான உலகம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதிகார அரசியல் மூலம் வளமையை மறுசீரமைக்கும் உலகில் நாம் வாழ்கிறோம்.

உலக அளவில் நாடுகளின் பாதுகாப்புத் துறைக்கு செய்யப்படும் செலவு மொத்தம் 2.7 டிரில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.261 லட்சம் கோடி) தாண்டியுள்ளது. பாதுகாப்புக்கும் வளமைக்கும் இருந்த எல்லை இனி இருக்காது. உலகில் தற்போது நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் ஆயுதப் படைகள் மட்டுமின்றி தொழில்துறை உற்பத்தி, ஆராய்ச்சி அமைப்புகள், நிா்வாக கட்டமைப்புகளுக்கும் நீடித்த தேவைகளை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளன என்று தெரிவித்தாா்.