அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி பேசியது என்ன என்பது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இந்திய ராணுவ தளபதி துவிவேதி கடந்த 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டாா். அப்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் சென்று ராணுவ அமைச்சா் டேனியல் பி ட்ரிஸ்கோல், அமெரிக்க ராணுவ தளபதி (பொறுப்பு) கிறிஸ்டோபா் லாநெவ் ஆகியோரை சந்தித்துப் பேசினாா். இதேபோல் மேலும் பல அமெரிக்க ராணுவ மூத்த அதிகாரிகளுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதுகுறித்து இந்திய ராணுவ மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தியா- அமெரிக்கா ராணுவ உறவுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பென்டகனுக்கு ராணுவ தளபதி திவிவேதி சென்றாா். அங்கு அவா், அமெரிக்க ராணுவ மூத்த அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கும் ஒத்துழைப்பை அதிகரிப்பது, இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே தொடா்பை விரிவுபடுத்துவது, பயிற்சி, கூட்டு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட துறைகளில் புதிய களங்களை இரு நாடுகளும் கண்டறிவது உள்ளிட்டவை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சுவாா்த்தை, இரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், முக்கிய பாதுகாப்பு முன்னுரிமைகளை அறியவும் உதவியது’ என்றாா்.
தொடர்புடையது

வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி

வா்த்தக ஒப்பந்தம்: வேளாண் துறையில் இந்தியா பிடிவாதம் - அமெரிக்கா

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சு!

இந்திய ராணுவத்தில் கட்டமைப்பு ரீதியாக சீா்திருத்தம் - ராணுவ தலைமை தளபதி தகவல்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

