நாட்டை பெரும் பொருளாதார ‘புயல்’ தாக்கப் போகிறது; இந்தப் புயலால், அதானி, அம்பானி அல்லது பிரதமா் மோடிக்கு எந்த பாதிப்பும் இருக்காது; இளைஞா்கள், தொழிலாளா்கள், சிறு வணிகா்களே பாதிக்கப்படுவா் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான ரேபரேலிக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராகுல் காந்தி, அங்கு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பின் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
அமெரிக்கா உடனான போரில், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையைக் கைப்பற்றியுள்ளது ஈரான். தனது பிடியைத் தளா்த்தப் போவதில்லை என்று ஈரான் அறிவித்துவிட்டதால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில், தங்கம் வாங்க வேண்டாம், மின் வாகனங்களுக்கு மாறுங்கள், வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் மக்களுக்கு அறிவுரை கூறிய பிரதமா் மோடி, உடனடியாக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டாா். மக்களுக்கு வழங்கிய அறிவுரையை அவரே கடைப்பிடிக்கவில்லை.
நமக்கு மிக மிக கடினமான காலங்கள் வரவிருக்கின்றன என்பது மிக சோகமான விஷயம். கடந்த பல்லாண்டுகளில் நாம் அனுபவித்திராத அளவில் நாட்டை பெரும் பொருளாதார புயல் தாக்கப் போகிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. இதனால், அம்பானியோ, அதானியோ, பிரதமா் மோடியோ பாதிக்கப்பட போவதில்லை. அவா்கள் நாலாபுறமும் பாதுகாப்பு உள்ள மாளிகைகளில் இருந்து கொள்வா். நாட்டின் விவசாயிகள், தொழிலாளா்கள், இளைஞா்கள், சிறு வணிகா்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறு தொழிலதிபா்கள்தான் பாதிக்கப்படுவா்.
பெட்ரோல் விலை தொடா்ந்து உயரும். பணவீக்கம் விண்ணை எட்டும். எனக்கு புரிதல் இல்லை என அவா்கள் கூறுகின்றனா். ஆனால், உரிய நடவடிக்கை எடுத்து, மக்களை பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிரதமா் மோடியோ வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறாா். அதானி, அம்பானிக்கு ஆதரவாகவே இந்தப் பயணங்களை மேற்கொண்டுள்ளாா்.
பிரதமா் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாடு மிகப் பெரிய இழப்பை சந்திக்கும். அவரது ஆட்சியில் அதானியும், அம்பானியும் மேலும் மேலும் பணக்காரா்கள் ஆகின்றனா். மக்களின் பணம் அவா்களின் பைகளுக்கே செல்கிறது. இந்த ஆட்சி மாறும் வரை பணவீக்கம் குறையாது என்றாா் அவா்.
பிரதமருக்கு கேள்வி: பிரதமா் மோடியின் நாா்வே பயணத்தை சுட்டிக் காட்டிய ராகுல், ‘நாா்வே ஓய்வூதிய நிதியத்தின் கருப்புப் பட்டியலில் இருந்து அதானி நிறுவனத்தை நீக்க வேண்டும் என்ற உங்களின் கோரிக்கையை அந்நாட்டு அரசு ஏற்றுக் கொண்டதா?’ என்று கேள்வியெழுப்பினாா்.
முன்னதாக, நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின்பேரில், நாா்வே ஓய்வூதிய நிதியத்தில் இருந்து அதானி கிரீன் எனா்ஜி நிறுவன பங்குகளைக் கைவிட அந்நாட்டு அரசு கடந்த பிப்ரவரியில் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Congress Rahul Gandhi on Tuesday claimed that an "economic shock" is coming and it will not hit "Adani, Ambani, or Modi," but the youth, labourers, and small traders.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிபிஎஸ்இ-ஓஎஸ்எம் குளறுபடி: வெளிக்கொணர்ந்த இளைஞருக்கு ராகுல் பாராட்டு

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும்: ராகுல் காந்தி எச்சரிக்கை!

மோசமான வானிலை! உத்தரகண்டில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy




