காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மே 20ஆம் தேதி அமேதிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவார் என்று காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரதீப் சிங்கால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கிராமங்கள் முதல் மாவட்ட நிலை வரையிலான பெருமளவிலான கட்சித் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தொண்டர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளையும் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குச்சாவடி மட்டம் வரை கட்சி அமைப்பை வலுப்படுத்துவது, இளைஞர்கள் மற்றும் பெண் தொண்டர்களின் பங்களிப்பை அதிகரிப்பது, மற்றும் கிராமங்கள் முழுவதும் மக்கள் தொடர்புப் பிரசாரங்களை விரைவுபடுத்துவது ஆகியவை ஆலோசனையின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.
அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, இந்த சந்திப்பு 2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகத் தயாரிப்புகளின் ஒரு பகுதியாகவும், கட்சி அமைப்பை மறுஆய்வு செய்யும் ஒரு முயற்சியாகவும் அமையும் என கருதுகின்றனர்.
Summary
Congress leader Rahul Gandhi is scheduled to visit Amethi on May 20, where he would hold meetings with party functionaries, workers, and senior leaders at the party's district headquarters, Congress district unit chief Pradeep Singhal said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகுலுக்கு முதல்வர் விஜய் நன்றி!

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - விஜய்..! தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட விடியோ!

தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து!
வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!
விடியோக்கள்

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு


