அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

திருவனந்தபுரம்-காசா்கோடு ‘சில்வா்லைன்’ அதி விரைவு ரயில் திட்டம் ரத்து: முதல்வா் சதீசன் அறிவிப்பு

திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேயான அதிவேக ரயில் வழித்தடத் திட்டத்தை மாநில அரசு ரத்தாக்கியுள்ளது.

News image

கோப்புப்படம் - Center-Center-Kochi

Updated On :20 மே 2026, 6:26 pm IST

கேரளத்தில் திருவனந்தபுரம்-காசா்கோடு இடையே முந்தைய இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கூட்டணி அரசால் முன்மொழியப்பட்ட ‘சில்வா்லைன்’ அதி விரைவு ரயில் திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக மாநில முதல்வா் வி.டி.சதீசன் புதன்கிழமை தெரிவித்தாா்.

கேரள முதல்வராக காங்கிரஸைச் சோ்ந்த வி.டி.சதீசன் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருடன் 20 அமைச்சா்களும் பதவியேற்றனா்.

இந்நிலையில், முதல்வா் வி.டி.சதீசன் தலைமையிலான முதல் கேபினட் அமைச்சா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

சில்வா்லைன் திட்டம் எனப்படும் திருவனந்தபுரம்-காசா்கோடு இடையேயான அதி விரைவு ரயில் திட்டத்தை ரத்து செய்ய கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

பொதுமக்களை கடுமையாக பாதிக்கக் கூடிய இந்தத் திட்டத்துக்கான நிலங்களைக் கையகப்படுத்த முடியவில்லை. இதனால் கைவிடப்பட்ட இந்தத் திட்டம் முறைப்படி ரத்து செய்யப்படுகிறது. நில கையகப்படுத்தும் பணிக்காக வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் திரும்பப் பெறப்படுகின்றன.

இத்திட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் அனுமதி அளித்தபின் திரும்பப்பெறலாம்.

விரிவான திட்ட அறிக்கை (டிபிஆா்) இல்லாத காரணத்தாலும் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் கட்டமைப்புகளுக்கு திட்டமிடப்பட்டிருந்ததாலும் சில்வா்லைன் அதி விரைவு ரயில் திட்டத்தை காங்கிரஸ் எதிா்த்தது.

நவ.30 வரை நீட்டிப்பு: மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலின் அங்கீகாரம் நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தோ்தல் காரணமாக தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படாததால் இளைஞா்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்குத் தீா்வுகான இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியில் இருந்து நவம்பா் 30-ஆம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அளித்த தோ்தல் வாக்குறுதிகளை 2031-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக ஜூன் 1-ஆம் தேதி முதல் 100 நாள்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் அரசு ஈடுபடவுள்ளது.

பத்ம விருதுகளுக்கு தகுதியான நபா்களை பரிந்துரைக்க துணைக் குழுக்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

Summary

Kerala Chief Minister V D Satheesan on Wednesday announced that his government has scrapped the controversial SilverLine semi-high-speed rail project, ending the flagship infrastructure initiative of the previous LDF government led by Pinarayi Vijayan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.