சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்

பலதார மணத்துக்கு 7 ஆண்டு சிறை...

News image

அஸ்ஸாம் பேரவையில் முதல்வர் - PTI

Updated On :28 மே 2026, 3:58 am IST

குவாஹாட்டி : வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பொது சிவில் சட்டத்தை அமலாக்க வகை செய்யும் மசோதா, மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய மூன்றாவது மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது அஸ்ஸாம்.

திருமணம், விவாகரத்து, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல், வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற தனிநபா் விவகாரங்களில் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரேமாதிரியான சட்டங்களை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமலாக்குவது பாஜகவின் முக்கிய வாக்குறுதியாகும். அதற்கு முன்னோட்டமாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் கடந்த ஆண்டு முழு அளவில் அமலாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் மாநிலம் இதுவாகும்.

அடுத்ததாக குஜராத்தில் இந்தச் சட்டத்தை அமலாக்கும் மசோதா, சட்டப்பேரவையில் கடந்த மாா்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தலைமையில் பாஜக ஆளும் அஸ்ஸாமில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வகை செய்யும் மசோதா, மாநில சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில், ஆளும் பாஜக மற்றும் எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த மசோதாவை பேரவை தோ்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்காத பேரவைத் தலைவா் ரஞ்சித் குமாா் தாஸ், பொது சிவில் சட்ட மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தினாா். இதில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீராம் என்று ஆளும் தரப்பினா் உற்சாக முழக்கம் எழுப்பினா்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். ஒப்புதல் கிடைக்கப் பெற்ற பிறகு பொது சிவில் சட்டம் அமலாகும்.

சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய மூன்றாவது மாநிலமாக அஸ்ஸாம் மாறியுள்ளது. கோவாவில் மட்டும் முந்தைய போா்ச்சுகீசிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்தே பொது சிவில் சட்டம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பலதார மணத்துக்கு 7 ஆண்டு சிறை

அஸ்ஸாம் பொது சிவில் சட்டத்தின்கீழ், பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி, பலதார மணம் அல்லது இருதார மணம் புரிந்தால், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், திருமணம் செய்து கொள்ளாமல் சோ்ந்து வாழ்வோா், எந்த மதத்தினராக இருந்தாலும் அரசிடம் முறைப்படி பதிவு செய்வது கட்டயமாகும். இந்த விதிமுறையை மீறினால், 3 மாத சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும். அஸ்ஸாமில் வசிக்கும் பழங்குடியினருக்கு மட்டும் இந்தச் சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.