பஞ்சாபில் தனியார் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 15 பயணிகள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தில்லியிலிருந்து ஜம்முவின் கத்ராவில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து படார்சி கலான் கிராமத்திற்கு அருகே வந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்தில் உயிரிழந்த பேருந்து ஓட்டுநர், ஃபெரோஸ்பூரைச் சேர்ந்த இந்தர்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் சிலர் ஃபதேகர் சாஹிப்பில் உள்ள அரசு மருத்துவமனைக்கும், மேலும் சிலர் சண்டீகரில் உள்ள மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக உதவி ஆய்வாளர் ஜக்ரூப் சிங் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
A bus driver was killed while 15 passengers were injured when the vehicle rammed into a trailer-truck on Thursday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










