எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பெங்களூரில் உகாண்டா பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை: மருத்துவப் பரிசோதனையில் தகவல்!

உகாண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image

எபொலா வைரஸ் - AP

Updated On :28 மே 2026, 12:54 pm IST

பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கு எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைத் தனிமைப்படுத்தி கண்காணித்தனர்.

உகாண்டா நாட்டின் கம்பாலா பகுதியைச் சேர்ந்த நஜீர் லதீஃபா (28) என்கிற அந்தப் பெண் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

அவருக்கு, எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைத் தனிமைப்படுத்தி கண்காணித்தனர்.

அப்பெண்ணின் ரத்த மாதிரிகள் தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் பெங்களூரு பிரிவு மூலம் புனேவில் உள்ள ஒரு சிறப்பு ஆய்வகத்திற்கு விரிவான பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அப்பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை என்றும் பரிசோதனையின் முடிவு ‘நெகட்டிவ்’ ஆக வந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தனது எக்ஸ் தளப் பதிவில், “ எபோலா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், அந்த நபருக்கு எபோலா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இந்தியாவில் எபோலா தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தற்போது இதுதொடர்பான கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுகாதார நெறிமுறைகளின்படி, ஆப்ரிக்க நாடுகளான உகாண்டா மற்றும் காங்கோவிலிருந்து இந்தியா வரும் பயணிகள் எபோலா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 21 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

மத்திய ஆப்ரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று காரணமாக இந்தாண்டில் மட்டும் 264 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

Summary

Ugandan Woman in Bengaluru Not Infected with Ebola: Medical Tests Confirm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.