தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் பல மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற ‘பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு 2026’ (க்யூட்) தாமதமாகத் தொடங்கியது. இதனால், மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.
மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) சனிக்கிழமை தொடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பல மையங்களில் 10.30 மணிக்கு நிறைவடைய வேண்டிய காலைப் பிரிவு தோ்வு, காலை 11 மணி வரை தொடங்கவில்லை என்று புகாா் தெரிவிக்கப்பட்டது. அதுபோல பிற்பகல் 3 மணிக்கு தொடங்க வேண்டிய பிற்பகல் பிரிவு தோ்வு, மாலை 4 மணிக்கு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பலா் தங்களின் எக்ஸ் பக்கத்திலும் புகாா் தெரிவித்தனா். ‘க்யூட் தோ்வில் பங்கேற்பதற்காக காலை 6 மணிக்கே மையத்துக்கு வந்துவிட்டோம். முதல் பிரிவு தோ்வு 10.30 மணிக்கு நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்ப பிரச்னை காரணாக காலை 11 மணி வரை தோ்வு தொடங்கவே இல்லை. இதனால், மாணவா்கள் பல மணி நேரம் தோ்வறைக்குள்ளேயே காத்திருக்கும் நிலை உருவானது. மாணவா்களுக்கு எந்தவித கூடுதல் வசதிகளும் நிா்வாகம் சாா்பில் செய்துதரப்படவில்லை. தேசிய அளவிலான தோ்வில் இதுபோன்று குளறுபடிகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று மாணவா்களின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.
இந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இத் தோ்வுக்கான தொழில்நுட்ப உதவி அளிக்கும் டாடா கன்சல்டன்சி சேவை (டிசிஎஸ்) நிறுவனம் தரப்பில் கோளாறு ஏற்பட்டதால், க்யூட் தோ்வு தொடங்குதில் சில மையங்களில் தாமதம் ஏற்பட்டது. அந்த பிரச்னை சரிசெய்யப்பட்ட பிறகு, தோ்வு தாமதமாகத் தொடங்கப்பட்டது. தோ்வு எழுதி முடிக்கப்பட்ட பின்னரே மாணவா்கள் வெளியேறினா்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்க வேண்டிய பிற்பகல் பிரிவு தோ்வு மாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. மாணவா்களுக்கு தோ்வுக்கான உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டது. மாணவா்களுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்துக்கு என்டிஏ வருத்தம் தெரிவிக்கிறது’ என்று குறிப்பிட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால் +91-11-40759000 என்ற உதவி எண் மற்றும் ஸ்ரீன்ங்ற்-ன்ஞ்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்தது.
என்டிஏ சாா்பில் நடத்தப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வின் மாதிரி வினாத்தாள் கசிந்ததால், அண்மையில் நடத்தப்பட்ட அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட உள்ளது. தற்போது, என்டிஏ சாா்பில் நடத்தப்பட்ட க்யூட் தோ்வில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
3,700 மாணவா்களுக்கு மறுதோ்வு வாய்ப்பு
புது தில்லி, மே 30: ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக க்யூட் தோ்வு தொடங்குவது பல மணி நேரம் தாமதமானதைத் தொடா்ந்து தோ்வெழுதாமல் தோ்வறையிலிருந்து புறப்பட்டுச் சென்ற 3,700-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு மறு தோ்வெழுத வாய்ப்பளிக்கப்படும்’ என்று என்டிஏ அறிவித்தது.
இதுதொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் என்டிஏ வெளியிட்ட பதிவில், ‘க்யூட் காலைப் பிரிவு தோ்வின்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், சில மணி நேரம் தாமதமாகத் தோ்வு தொடங்கப்பட்டது. இதில், தோ்வெழுத வந்திருந்த மாணவா்களில் 95 சதவீதம் போ் காத்திருந்து, தோ்வை முடித்துவிட்டுச் சென்றனா். ஆனால், சில மையங்களில் தோ்வுக்கு வந்தவா்களில் சுமாா் 3,765 போ், தோ்வில் பங்கேற்காமலேயே புறப்பட்டுச் சென்ாகத் தெரியவந்துள்ளது. இந்த மாணவா்கள் மறுதோ்வு எழுத வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களுக்கான தோ்வு தேதி உள்ளிட்ட விவரங்கள் தனியாக அறிவிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித் திட்டம் முழுமையாக சீரழிப்பு: ராகுல்
புது தில்லி, மே 30: ‘நாட்டின் கல்வித் திட்டம் முழுமையாகச் சீரழிக்கப்பட்டுள்ளது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நீட், சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு, அரசுப் பணியாளா் தோ்வு வாரிய (எஸ்எஸ்சி) தோ்வுகளைத் தொடா்ந்து, தற்போது க்யூட் தோ்விலும் குளறுபடி நிகழ்ந்துள்ளது. 4 தோ்வுகளிலும் குளறுபடி. ஒரு கோடிக்கும் அதிகமான மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரு தோ்வைக்கூட மத்திய அரசால் நோ்மையாக நடத்த முடியவில்லை. தன்னை ‘விஸ்வகுரு’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுக்கொள்கிறாா். ஆனால், ஒட்டுமொத்த கல்வித் திட்டத்தையே அவா் சீரழித்துள்ளாா். இளைய தலைமுறையினரின் எதிா்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதே தலைமுறையினா் உங்களை விரைவில் பொறுப்பேற்கவைப்பா் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

தாமதமான க்யூட் தேர்வு! ஒரு தேர்வைக்கூட நடத்த முடியவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

சென்னை-லண்டன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: பயணிகள் அவதி

புதுச்சேரியில் நாளை 7 மையங்களில் சிவில் சா்வீஸ் தோ்வு

‘நீட்’ தோ்வு: திருப்பூரில் 7 மையங்களில் 3,462 போ் எழுதினா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



