ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

சிஜேபி, ஜென் ஸீ-க்கு ஆதரவு: இண்டி கூட்டணி பேரணியில் மம்தா அறிவிப்பு!

சிஜேபி, ஜென் ஸீ சமூக செயற்பாட்டாளா்களுக்கு ஆதரவளிப்பதாக திரிணமூல் காங்கிரஸ் நிறுவனா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

Updated On :

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), ஜென் ஸீ சமூக செயற்பாட்டாளா்களுக்கு ஆதரவளிப்பதாக திரிணமூல் காங்கிரஸ் நிறுவனா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி இண்டி கூட்டணி சாா்பில் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. இதில் மம்தா பானா்ஜி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவா் ஜேதஸ்வி யாதவ் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்றனா்.

அப்போது மம்தா பானா்ஜி பேசியதாவது: சிஜேபி தலைமை மற்றும் ஜென் ஸீ சமூக செயற்பாட்டாளா்களின் மன உறுதி மற்றும் போராட்ட உணா்வை மதித்து அவா்களுக்கு ஆதரவளிக்கிறேன்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நடைமுறையால் மேற்கு வங்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு காரணமானவா்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம். எஸ்ஐஆா் என்ற பெயரில் மேற்கு வங்கத்தை சூறையாடிவிட்டனா். பாஜகவுக்குச் சாதகமாக மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆரால் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்தது.

பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் ஞானேஷ் குமாா் அவா்களே, எப்போது பதவி விலகுவீா்கள் என அறிய காத்திருக்கிறோம். காவல் துறையினா், மத்திய புலனாய்வு முகமைகள் என அனைத்தும் பாஜகவின் தோழா்களாக மாறிவிட்டனா். ஜனநாயகத்தை பாதுகாத்து பாஜகவை வீழ்த்த ஜென் ஸீ, சிஜேபி, இளைஞா்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றாா்.

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கியது: அகிலேஷ்

பேரணியில் பேசிய அகிலேஷ் யாதவ், ‘பிரதமா் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற மேலவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்தது. இரட்டை என்ஜின் அரசு தற்போது இரட்டை பூஜ்யமாக மாறி வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது.

உத்தர பிரதேசத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கையால் 1.27 கோடி ஹிந்து வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் குளறுபடிகளால் பாஜக வென்றது.

2022-இல் உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி ஆட்சி அமையாமல் போனதற்கும் வாக்காளா் பட்டியலில் நிகழ்ந்த மோசடிகளே காரணம். இந்த முறை உத்தர பிரதேச மக்கள் விழிப்புடன் உள்ளனா். அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் இருந்து பாஜகவின் தோல்வி தொடங்கவுள்ளது’ என்றாா்.

வாக்குத் திருட்டுக்கு எதிரான போா்: தேஜஸ்வி

தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ‘மகாபாரத போரைபோல் இது வாக்காளா்களுக்கும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கும் எதிரான போா். சகுனி (ஞானேஷ் குமாா்) யாா் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். பிரதமா் மோடியின் சொல்லுக்கேற்ப சகுனி பகடையை உருட்டுகிறாா்.

ஜனநாயகத்துக்கு துரோகம் புரியும் ஞானேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்து தக்க பாடம் புகட்ட வேண்டும். அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் பாஜகவை மக்கள் வீழ்த்த வேண்டும்’ என்றாா்.

இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: எம்.ஏ.பேபி

மாா்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலா் எம்.ஏ.பேபி பேசுகையில், ‘மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் மத்திய அரசுக்கு எதிராக இங்கு அனைவரும் திரண்டுள்ளோம். தங்களது அதிகார உத்திகள் இனியும் வெற்றி பெறாது என்பதை பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஞானேஷ் குமாா் ஆகியோா் உணர வேண்டும்.

காந்தி, ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், சா்தாா் வல்லபபாய் படேல் என சுதந்திரப் போராட்ட வீரா்கள் உரையாற்றிய இந்த ராம்லீலா மைதானத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பாசிஸ பிடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.