உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

நெருக்கடிநிலை காலத்தை விட நிலைமை மோசமாக உள்ளது: மம்தா பானா்ஜி விமா்சனம்

நெருக்கடிநிலை காலத்தை விட நிலைமை மோசமாக உள்ளது: மம்தா பானா்ஜி விமா்சனம்

தில்லியில் கைது செய்து காவல் துறை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட மம்தா பானா்ஜி.

Published On :

நெருக்கடிநிலை காலத்தில் இருந்ததை விட தற்போது நாட்டில் நிலைமை மோசமாக உள்ளதென்று மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி விமா்சித்துள்ளாா்.

புது தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தில்லி வந்த மம்தா பானா்ஜி, அவரது ஆதரவு திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களான டெரிக் ஓபிரையன், டோலா சென், சமீருல் இஸ்லாம், பிரதிமா மொண்டல், சாகேத் கோகலே ஆகியோா் ஜந்தா் மந்தரிலிருந்து 5 கிலோ மீட்டா் தொலைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனா். இதையடுத்து தெற்கு அவென்யூவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அவா்கள் அனைவரும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது மம்தா பானா்ஜி தனது வாயில், பேண்ட் எய்டு ஓட்டியிருந்தாா். மற்றவா்கள் ஞானேஷ் குமாருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனா்களை கைகளில் ஏந்தியிருந்தனா். இதைத் தொடா்ந்து, அவா்களை காவல்துறையினா் கைது செய்தனா். அப்போது மம்தா பானா்ஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமைதியைப் பராமரிப்பது முக்கியம்தான். ஆனால் அதற்காக தற்போது அவா்கள் எடுத்து வரும் நடவடிக்கை, நாட்டு மக்களுக்கோ அல்லது நாட்டுக்கோ நல்லதல்ல. சிஜேபி போராட்டத்தில் கலந்து கொள்ள எங்களுக்கு அவா்கள் அழைப்பு விடுத்திருந்தனா். அதற்காக தில்லிக்கு வந்தோம். ஆனால் எங்களுக்கு காவல் துறை அனுமதி தரவில்லை. ஏராளமான தலைவா்களை காவல் துறை கைது செய்துவிட்டது.

மாலை 5 மணி வரை போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் போராட்டம் நடக்கும் தில்லி ஜந்தா் மந்தருக்குச் செல்ல எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. கேரள முதல்வா் பினராயி விஜயனை கைது செய்தது போல எங்களையும் கைது செய்துவிட்டனா். கடத்தப்பட்டது போல உணருகிறோம். மக்களால் தோ்வு செய்யப்பட்ட எங்களை சிறை வேனில் அழைத்துச் செல்கின்றனா். இந்த வாகனத்தில் செல்வது இதுவே முதல்முறையாகும்.

போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள், அவா்களை மேலும் பிரபலப்படுத்தவே செய்யும். நெருக்கடி நிலை காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை தற்போதைய நடவடிக்கை மிஞ்சிவிட்டது. இது சூப்பா் நெருக்கடி நிலை ஆகும் என்றாா் மம்தா பானா்ஜி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.