வாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

வாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்வி

வாக்களிக்கும் உரிமையைக் கூட பாஜகதான் தீர்மானிக்குமா? என அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

 Samajwadi Party Akhilesh Yadav INDIA bloc rally

அகிலேஷ் யாதவ் - ஏஎன்ஐ

Updated On :

நாட்டில் வாக்களிக்கும் உரிமையைக் கூட பாஜக அரசுதான் தீர்மானிக்குமா? என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (நவ. 1) நடைபெற்றது.

நண்பகல் 12 மணியளவில் தில்லியின் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடல் வரை பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராம் லீலா திடலில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

''அங்கதனின் அசைக்க முடியாத பாதம் என்று கூறிக்கொள்பவர்களுக்கு இன்று தங்கள் இடங்களுக்கு கீழே கூட இடம் இல்லை. காசி மக்கள் அவர்களுக்கு இரட்டை பூஜ்ஜியத்தை வழங்கியுள்ளனர்.

மக்களிடம் சென்று வாக்கு கேட்டு பாஜகவால் வெற்றி பெற முடியாது என்பதால், தொடர்ந்து அக்கட்சி சதி வேலைகள் செய்து வருவதை நாம் பார்க்கிறோம். அதனால் இம்முறை தேர்தல் ஆணையத்தை அவர்கள் தங்களுடன் சதி வேலைக்காக சேர்த்துக்கொண்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் காலம் காலமாக இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உ.பி. மக்களுக்கு வரவேற்கவும் தெரியும்; அநியாயக்காரர்களை வழியனுப்பி வைக்கவும் தெரியும். 2027 ஆம் ஆண்டு அத்தகைய வழியனுப்பு விழா பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் நடக்கும்.

மாற்றம் எந்த நேரத்திலும் நடக்கும் என்பதற்கு இங்கு கூடியுள்ள மக்களே சாட்சி. நாட்டில் யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்கக் கூடாது என்பதை கூட பாஜகதான் முடிவு செய்யுமா?

சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பும் அளிக்காத பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு, நாட்டுப்பற்றை மக்களுக்கு ஊட்டுகிறதா? நாட்டின் ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம். அவர்களுக்கு பாடம் புகட்டுவோம்'' என அகிலேஷ் யாதவ் பேசினார்.

Summary

Will BJP decide even on the right to vote? Samajwadi Party Akhilesh Yadav INDIA bloc rally

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.