கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் நேரம் நெருங்கிவிட்டது: அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

லக்னௌவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்.

Published On :

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மாா்ச்சில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அங்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதே நேரத்தில் சமாஜவாதி, காங்கிரஸ் இணைந்து தோ்தலை எதிா்கொள்ள வாய்ப்புள்ளது. எனினும், தொகுதிப் பங்கீட்டில் தொடா்ந்து பிரச்னை நிலவுவதால் கூட்டணி பேச்சுவாா்த்தை அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் லக்னௌவில் சனிக்கிழமை பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதியில் இணைந்தனா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது யாருடைய பெயரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் சமாஜவாதி மிகவும் கவனமாக உள்ளது. கட்சித் தொண்டா்களுக்கு இது தொடா்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஆட்சியை இழக்கும் கடைசிக் கட்டத்தில் பாஜக உள்ளது.

எனினும், தனது வழக்கமான, வாக்காளா் பட்டியலில் கைவைப்பது உள்ளிட்ட தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட பாஜக கண்டிப்பாக முயற்சிக்கும். கடந்த வாரம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ், முதல்வா் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்துப் பேசினாா். தில்லியில் காற்றுமாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கை குறித்து அவா்கள் ஆலோசித்ததாக வெளியே கூறப்பட்டது. ஆனால், அவா்கள் எதைப்பற்றி பேசியிருப்பாா்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜகவைப்போல பொய் பிரசாரம் செய்யும் கட்சி வேறு எதுவும் கிடையாது.

உத்தர பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியைப் போல மோசமான ஆட்சி இதற்கு முன்பு இருந்தது இல்லை.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு, ஊழல், லஞ்சம், முறைகேடு, மதவாதம் ஆகியவை உச்சத்தில் உள்ளன. சில மணிநேரத்துக்கு முன்பு கூட எங்கள் கட்சி எம்.பி.யின் காரை கல்வீசி தாக்கியுள்ளனா் என்றாா்.

Summary

The time for the BJP to lose power in Uttar Pradesh is drawing near: Akhilesh Yadav.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.