நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

உ.பி. முதல்வராக வேண்டுமா? அகிலேஷ் யாதவுக்கு ஓவைசியின் ஆதரவு தேவை!

உத்தரப் பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவுக்கு அசாதுதீன் ஓவைசியின் ஆதரவு தேவை எனப் பேசியது குறித்து...

Want to become UP CM Bring Asaduddin Owaisi AIMIM to Akhilesh Yadav

அகிலேஷ் யாதவ் / அசாதுதீன் ஓவைசி - கோப்புப் படம்

Published On :5 வினாடிகள் முன்பு

உத்தரப் பிரதேச மாநில முதல்வராக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அசாதுதீன் ஓவைசியின் ஆதரவு தேவை என அகில இந்திய மஜ்லீஸ் - இ - இதேஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏஐஎம்ஐஎம்) இன்று (ஆக. 30) தெரிவித்தது.

இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஷதாப் செளஹான் கூறியதாவது:

அகிலேஷ் யாதவின் அரசியல் வியூகம் அசாதுதீன் ஓவைசி இல்லாமல் நிறைவு பெறாது. அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக வேண்டும் என்றால், ஓவைசியின் ஆதரவு அவசியம் தேவை எனத் தெரிவித்தார்.

பட்டியலினத்தவர்கள், பின்தங்கிய மக்கள், சிறுபான்மையினரைச் சுற்றி அரசியல் வியூகம் அமைக்கும் அகிலேஷ் யாதவின் முயற்சிக்கு ஓவைசியின் வருகை மேலும் பலம் சேர்க்கும் வகையில் இருக்கும் என்றும், தற்போதைய ஆளும் கட்சியின் வளத்துக்கு எதிரான கட்டமைப்புக்கு இது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, சமாஜவாதியுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு இதுவே சரியான நேரம்; தேர்தல் முடிந்த பிறகு வருத்தப்பட வேண்டாம் எனவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜகவை வீழ்த்த சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Want to become UP CM Bring Asaduddin Owaisi AIMIM to Akhilesh Yadav

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.