உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜகவை வீழ்த்த சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அசாதுதீன் ஓவைசி, அகிலேஷ் யாதவுடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
அந்த கூட்டத்தில் ஓவைசி பேசியதாவது:
”இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். தற்போது மீண்டும் சொல்கிறேன், உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதை நாங்கள் விரும்பவில்லை.
சமாஜவாதியுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறேன். பேச்சுவார்த்தைக்கு இதுவே சரியான நேரம். தேர்தல் முடிந்த பிறகு வருத்தப்பட வேண்டாம்.
எங்கள் போராட்டம் எங்கள் கண்ணியத்துக்கான போராட்டம், நீதிக்கான போராட்டம். இனியும் நாங்கள் கீழ்மட்டத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை, எங்களுக்குச் சமத்துவம் வேண்டும்.
அகிலேஷ் அமரும் நாற்காலிக்கு முன்னால், ஓவைசியும் நாற்காலியில் அமர்ந்து பேசுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Don't cry later - Owaisi invites Akhilesh Yadav to form an alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புவனேஸ்வர் குமாரின் சாதனையை சமன் செய்த மயங்க் யாதவ்!

மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

படிவம் 16-ல் வரி இல்லை என்றால்.. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய அவசியமில்லையா?

அரசியல் வன்முறையை பாஜக தூண்டுகிறது: அகிலேஷ் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET




