FOLLOW US

ON GOOGLE DISCOVER

400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

புவனேஸ்வர் குமாரின் சாதனையை சமன் செய்த மயங்க் யாதவ்!

சர்வதேச டி20 போட்டிகளில் புவனேஸ்வர் குமாரின் சாதனையை வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் சமன் செய்துள்ளார்.

News image

மயங்க் யாதவ் - படம் | பிசிசிஐ

Updated On :26 ஜூலை 2026, 8:07 pm IST

சர்வதேச டி20 போட்டிகளில் புவனேஸ்வர் குமாரின் சாதனையை வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் சமன் செய்துள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 26) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுக்க, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் மயங்க் யாதவ் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஜிம்பாப்வே வீரர் பிரையன் பென்னட்டின் விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் ஆட்டத்தின் முதல் பந்தில் மூன்றாவது முறையாக மயங்க் யாதவ் விக்கெட்டினைக் கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்பாக, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் சர்வதேச டி20 போட்டிகளில் ஆட்டத்தின் முதல் பந்தில் மூன்று முறை விக்கெட்டினை வீழ்த்தியிருக்கிறார். தற்போது, அந்த சாதனையை மயங்க் யாதவ் சமன் செய்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள்

புவனேஸ்வர் குமார் - 3 முறை

மயங்க் யாதவ் - 3 முறை

ஹார்திக் பாண்டியா - 2 முறை

அர்ஷ்தீப் சிங் - 2 முறை

ரவிச்சந்திரன் அஸ்வின் - ஒரு முறை

Summary

Fast bowler Mayank Yadav has equalled Bhuvneshwar Kumar's record in international T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.