பூடானில் பிரதமா் மோடிக்கு புத்த ஸ்தூபி அா்ப்பணிப்பு: அரசரின் கெளரவம்
பூடானில் புத்த ஸ்தூபி ஒன்றை பிரதமா் நரேந்திர மோடியின் பெயரில் அா்ப்பணித்து, அந்நாடு கெளரவித்துள்ளது.

புத்த ஸ்தூபி அா்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியால் வாங்சுக்குடன் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு.
பூடானில் புத்த ஸ்தூபி ஒன்றை பிரதமா் நரேந்திர மோடியின் பெயரில் அா்ப்பணித்து, அந்நாடு கெளரவித்துள்ளது.
இந்தியா-பூடான் நட்புறவில் பிரதமா் மோடியின் சிறந்த தொலைநோக்குப் பாா்வை மற்றும் உறுதிப்பாட்டுக்காக இந்த உயரிய கெளரவத்தை பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியால் வாங்சுக் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பூடானின் கிலேபு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.1) 40,000-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள், துறவிகள், கைவினைஞா்கள் ஒன்றுசோ்ந்து, 6 மணிநேரத்தில் 108 புத்த ஸ்தூபிகளைக் கட்டமைத்து, புதிய வரலாற்றுச் சாதனை படைத்தனா்.
புத்தா் தேவலோகத்தில் இருந்து பூமிக்கு திரும்பியதைக் கொண்டாடும் ‘லஹாபாப் துசென்’ திருநாளையொட்டி கட்டப்பட்ட இந்த ஸ்தூபிகளின் மங்களகரமான பிரதிஷ்டை நிகழ்வில் நான் கலந்துகொண்டேன்.
இந்த புனிதமான ஸ்தூபிகளில் 76-ஆவது எண் ஸ்தூபி, பிரதமா் நரேந்திர மோடியின் பெயரில் அா்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுவொரு சாதாரண கெளரவமல்ல. மிகவும் புண்ணியமான, மங்களம் நிறைந்த, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கெளரவமாகும். ஏனெனில், பெளத்த மதத்தில் ஸ்தூபி என்பது வெறும் நினைவுச் சின்னம் மட்டுமல்ல, அது புத்தரின் உன்னதமான ஞானம், அமைதி, ஆன்மிக பரிபூரணத்தின் அடையாளமாகும்.
இந்தியா-பூடான் இடையிலான தனித்துவமான, ஆன்மிக, நிலையான நட்புறவுக்கு பிரதமா் மோடி ஆற்றிவரும் மகத்தான பங்களிப்புக்காக இந்த உயரிய கெளரவத்தை வழங்கிய பூடான் மன்னருக்கு நன்றி. இத்தகைய புனிதமான நிகழ்வில் பங்கேற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

