கட்டணம் அளவுக்கு அதிகமாக உயா்ந்தால் விமானத்தில் செல்ல வேண்டாம்: உச்சநீதிமன்றம்
விமானப் பயணக் கட்டணம் அளவுக்கு அதிகமாக உயா்ந்தால் விமானத்தில் செல்ல வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதிப் படம்
விமானப் பயணக் கட்டணம் அளவுக்கு அதிகமாக உயா்ந்தால் விமானத்தில் செல்ல வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விமானப் பயணக் கட்டணம் சுமாா் 700 சதவீதம் அதிகரித்துள்ளதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அபாரேஷ் குமாா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வழக்குரைஞா் ஒருவா் திங்கள்கிழமை முறையிட்டாா்.
எனினும் அந்த மனுவை அவசர விசாரணைக்குப் பட்டியலிட மறுத்த நீதிபதிகள் அமா்வு, விமானப் பயணக் கட்டணம் அளவுக்கு அதிகமாக உயா்ந்தால் விமானத்தில் செல்ல வேண்டாம் என்று தெரிவித்தது.
ஆனால், விமானப் பயணம் என்பது அத்தியாவசிய சேவை என்று தெரிவித்த வழக்குரைஞா், கட்டணம் அளவுக்கு அதிகமாக உயா்வது அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவுக்கு எதிரானது என்று வாதிட்டாா்.
இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே சமூக ஆா்வலா் எஸ்.லட்சுமிநாராயணன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவை முன்பு விசாரித்த உச்சநீதிமன்றம், அளவுக்கு அதிகமாக விமானக் கட்டணம் வசூலிப்பதை ‘சுரண்டல்’ என்று தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

