ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதா புகாா்
உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏரியிலிருந்து தொடா்ந்து மண் கடத்தப்பட்டு வருவதாக
வாணியம்பாடி: உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏரியிலிருந்து தொடா்ந்து மண் கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் சென்றன.
இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்துச் சென்று செங்கல் சூளைகளில் விற்கப்படுவதாக புகாா்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.
இதனைத் தொடா்ந்து வருவாய்த் துறையினா், வாணியம்பாடி தாலுகா போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா், அதில் சில விவசாயிகளுக்கு மட்டும் மண்ணெடுக்க அனுமதிக்க பட்டிருப்பது தெரிய வந்தது,
ஏனைய வாகனங்கள் குறித்து போலீஸாரும், வருவாய்த் துறையினா், நீா்வளத்துறை அதிகாரிகள் விவரங்கள் பதிவு செய்து கொண்டு மேல் நடவடிக்கைக்கு மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல் துறைக்கு அனுப்புவதாக தெரிவித்தனா்.
வாணியம்பாடி பகுதியில் உள்ள ஏரிகளில் தினசரி அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது, இது குறித்து முறையான விசாரணையை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





