படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்வி

தேர்தல் ஆணையத்தின் படிவம் 6 -ன் திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

Chief Election Commissioner Gyanesh Kumar, DMK MP Kanimozhi

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்

Published On :

தேர்தல் ஆணையத்தின் படிவம் 6 -ன் திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? என்று திமுக எம்.பி. கனிமொழி திங்கள்கிழமை (அக். 5) கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும் இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் 'படிவம் 6' உடன் புதிதாக இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் ஆணையம் அண்மையில் கூறியிருந்த நிலையில், 'அதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை' என்று தலைமை நீதிபதி இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

படிவம் 6-இல் செய்யப்பட்ட திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை இன்று தெளிவுபடுத்தியுள்ளது. அப்படியானால், இந்த மாற்றத்துக்கு யார் அனுமதி அளித்தது?

இந்த மாற்றத்தைச் செய்தது யார் என்பதை உச்ச நீதிமன்றமே அறிய முற்படுவதால், இது ஒரு சிறிய பிரச்னை அல்ல.

சமீபத்திய தேர்தல்களில் ஆச்சரியமூட்டும் அரசியல் மாற்றங்கள் காணப்பட்டன. இதற்கு மத்தியில், தேர்தல் நடைமுறையில் ஏற்படுத்தப்பட்ட விளக்கப்படாத மாற்றங்கள் நமது தேர்தல் அமைப்பின் நேர்மை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.

Summary

DMK MP Kanimozhi questioned on Monday (Oct. 5) who granted permission for the amendment to the Election Commission's Form 6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.