ஈரானுக்கு உதவியதாக இந்திய, துருக்கி நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
ஈரானுக்கு உதவியதாக இந்தியாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது குறித்து...
டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
ஈரானுக்கு உதவியதாக இந்தியா மற்றும் துருக்கி நாடுகளின் சில நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ல் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியது.
மேலும், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் மற்றும் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசு எச்சரித்தது.
இதனிடையே, அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. ஈரான் போர் மற்றும் பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களாலேயே குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரான் போர்தான் காரணம் என டிரம்ப்பும் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், ஈரானின் ரகசிய எண்ணெய் வர்த்தகத்துக்கு உதவி செய்ததாக ஓசனிக் டெக்னாலஜிஸ், ஆர்யவர்த் ஷிப் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட இந்தியாவின் 9 நிறுவனங்கள் மீதும் துருக்கி நாட்டின் சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
Summary
The US imposes new sanctions on companies and individuals in India and Turkey over ties to Iran and shipments of Iranian oil
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


