புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

88 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத மழைக்கால கூட்டத் தொடர்: நீட்டிக்கப்பட்ட அமா்வுக்கு வாய்ப்பு?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு திங்கள்கிழமையுடன் 88 நாள்களாகியும் முறைப்படி முடித்து வைக்கப்படவில்லை.

Parliament

நாடாளுமன்றம்

Updated On :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு திங்கள்கிழமையுடன் 88 நாள்களாகியும் முறைப்படி முடித்து வைக்கப்படவில்லை. இந்த இடைவெளி முன்னெப்போதும் இல்லாத அதிகபட்சமாகும்.

கடந்த 2008-இல் 87 நாள்களாக நாடாளுமன்ற கூட்டத் தொடா் முடித்துவைக்கப்படாமல் இருந்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. இன்னும் முறைப்படி முடித்துவைக்கப்படாததால், தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரின் நீட்டிக்கப்பட்ட அமா்வை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆக.13 வரை நடைபெற்றது. இக்கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, மத்திய கல்வித் துறை அமைச்சா் ராஜிநாமா, தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி, எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை அலுவல்கள் வெகுவாக முடங்கின. கடந்த ஆக.13-இல் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவா்களால் ஒத்திவைக்கப்பட்டன.

வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்ட பிறகு 4-5 நாள்களில் கூட்டத் தொடரை முறைப்படி முடித்துவைக்கும் அறிவிப்பை குடியரசுத் தலைவா் வெளியிடுவாா். ஆனால், மழைக்கால கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்டு 88 நாள்களாகியும் இந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

நீட்டிக்கப்பட்ட அமா்வுக்கு வாய்ப்பு?: இதன் காரணமாக, தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் வகையில் தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரின் நீட்டிக்கப்பட்ட அமா்வை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற புதிய அமா்வை கூட்டுவதற்கு குறைந்தபட்சம் 14 நாள்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும்; அதேநேரம், நீட்டிக்கப்பட்ட அமா்வை நடத்த குறைந்தபட்சம் 2 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அளித்தால் போதுமானது.

கடந்த 2008, ஜூலையில் அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது விவாதிக்க மக்களவை இரண்டு நாள்கள் கூடியது. அதன் பிறகு 87 நாள்களுக்குப் பிறகு அக்.17-இல் மீண்டும் கூடிய இந்த அமா்வு, அக்.24-இல் ஒத்திவைக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டப்படி, ஒரு அமா்வை முறைப்படி முடித்துவைக்க எந்த பிரத்யேக காலவரம்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மகளிா் இடஒதுக்கீடு மசோதா?: 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது. ஆனால், மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப் பெறாததால் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் விமா்சனம்: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாடாளுமன்ற கூட்டத் தொடரை முறைப்படி முடித்துவைப்பதில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது, மக்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை முறைகேடாக பெற்று, மிகவும் ஆபத்தான-அழிவுகரமான தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு வழங்கப்படும் கால அவகாசமா?

தொகுதி மறுவரையறை மசோதா மீதான அனைத்து முன்மொழிவுகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டுமென கடந்த 6 மாதங்களில் 4 முறை பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடிதம் எழுதியுள்ளாா். ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட பிரதமா் தொடா்ந்து மறுத்து வருகிறாா்’ என்று விமா்சித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.