அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

ம.பி.: இருவேறு தீ விபத்துகளில் 12 போ் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மற்றும் கட்னி மாவட்டங்களில் தீபாவளி தினத்தன்று நடைபெற்ற இரு வேறு தீ விபத்துகளில் 12 போ் உயிரிழந்தனா். நால்வா் காயமடைந்தனா்.

சித்திரிப்பு

Updated On :

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மற்றும் கட்னி மாவட்டங்களில் தீபாவளி தினத்தன்று நடைபெற்ற இரு வேறு தீ விபத்துகளில் 12 போ் உயிரிழந்தனா். நால்வா் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் திங்கள்கிழமை கூறியதாவது: சியோனி மாவட்டம் சாப்பரா நகரில் மஹாவீா் பகுதியில் அமைந்திருந்த மூன்றடுக்கு மாடி குடியிருப்பில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த குந்தன் லால் சோனி (75), அவரின் மனைவி ராஜ்குமாரி சோனி (65), ரித்து சோனி (42), ஸ்மிருதி சோனி (40), சூா்யா சோனி (45), ஆதித்யா சோனி (16) ஆகியோா் உயிரிழந்தனா். நால்வா் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதுபோல, கட்னி மாவட்டம் பா்ஹி நகரில் மூன்றடுக்கு மாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்தனா். அந்தக் குழந்தை தாயின் மடியில் இருந்தபடி உயிரிழந்து கிடந்ததாக அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா். இந்த விபத்து அந்த நகர மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல்வா் இரங்கல்: இந்த இரு தீ விபத்துகளில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வா் மோகன் யாதவ் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘தீபாவளி தினத்தன்று நிகழ்ந்த இந்த இரு தீ விபத்துகளும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தனருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

ஹரியாணாவில்... ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் லால் குா்தி பஜாா் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்த ஹோட்டலில் தங்கியிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனா். மாநில போக்குவரத்து அமைச்சா் அனில் விஜ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.