தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகுமா? மன்னிப்பு கோரிய பாஜக எம்எல்ஏ!

பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகும் என்று பேசிய பாஜக எம்எல்ஏ, அதற்கு விளக்கம் அளித்தது குறித்து...

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பாபியா அதிகாரி - படம் - ஏஎன்ஐ

Updated On :

பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகும் என்று பேசிய பாஜக எம்எல்ஏ, தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார்.

மேலும், தான் பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, மன்னிப்பு கோருவதாகவும் தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது, மேற்கு வங்கம், கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் நடைபெற்ற காளி பூஜை பந்தல் திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ. பாபியா அதிகாரி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், “பட்டாசு வெடிப்பதால் பல நோய்கள் குணமாகும்” என்று பேசியது சமூக ஊடகங்களில் சர்ச்சையானது.

இதுகுறித்து பாபியா அதிகாரி அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

இது நம்மிடையே உள்ள தீமைகளை ஒழிப்பதற்காகக் கொண்டாடப்படும் ஒரு ஒளித் திருவிழா, விளக்கு ஏற்றும் திருவிழா. முந்தைய காலங்களில், சடங்குகள் மூலம் இதுபோன்ற பல தீமைகள் ஒழிக்கப்பட்டன.

ஆனால் தற்போது, ​​நாம் பட்டாசுகளின் காலத்தில் வாழ்கிறோம். மேலும் அறிவியல் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டால், ஒருவேளை நான் பேசிய கருத்துகள் இனி பொருத்தமானதாக இருக்காது.

ஆகையால், யாரேனும் புண்பட்டிருந்தால், நான் மன்னிப்பு கோருகிறேன். எனது கருத்தை திரும்பப் பெற நான் தயாராக இருக்கிறேன். அது திரும்பப் பெறப்பட்டதாகக் கருதுங்கள் என்று பாபியா அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Summary

BJP MLA, who had claimed that bursting firecrackers cures diseases, has now offered an explanation for his statement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.