மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி!
மணிப்பூரில் கார்கள் மீது சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானது பற்றி....

மணிப்பூர்.
மணிப்பூரில் கார்கள் மீது சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலம், உக்ருல் மாவட்டத்தில் இரண்டு கார்கள் மீது சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பெண்கள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இம்பால் - உக்ருல் சாலையில் உள்ள நியூ ஹெவன் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள், இரண்டு கார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் கார்களில் பயணித்த இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வாகனங்களின் முன்பக்கக் கண்ணாடிகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன என்றும் அவர் கூறினார்.
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தபௌ குகி கிராமத்திற்கு அருகிலும், அண்டை மாவட்டமான சேனாபதியின் கைலெங்ஜாங் பகுதியிலும் இரு தரப்புக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, 42 வயதுடைய குகி இனப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும் இருவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்து ஒரு நாள் கழித்தே தற்போதைய தாக்குதல் நிகழ்ந்துள்ளது. மணிப்பூரில் 2023 மே மாதம் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மைதேயி சமூகத்தினருக்கும் மலைப்பகுதியைச் சேர்ந்த குகி சமூகத்தினருக்கும் இடையே வெடித்த இன மோதலில் இதுவரை 306 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், 49 பேர் காணாமல் போயுள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அதேசமயம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மலை மாவட்டங்களில் குகி மற்றும் நாகா இனத்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Four people, including two women, were killed as suspected militants fired at two vehicles in Manipur's Ukhrul district on Friday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


