தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

‘குஜராத்தி நண்பா்’ எனக் கூறிய பிட்ரோடாவுக்கு பிரதமா் வாழ்த்து

தன்னை ‘குஜராத்தி நண்பா்’ என்று குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் சாம் பிட்ரோடாவுக்கு பிரதமா் மோடி எக்ஸ் பதிவு வாயிலாக தீபாவளி மற்றும் குஜராத்தி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :

தன்னை ‘குஜராத்தி நண்பா்’ என்று குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் சாம் பிட்ரோடாவுக்கு பிரதமா் மோடி எக்ஸ் பதிவு வாயிலாக தீபாவளி மற்றும் குஜராத்தி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

அரசியல் ரீதியில் பிரதமா் மோடி மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமா்சிப்பவரான பிட்ரோடாவுக்கு பிரதமா் வாழ்த்துத் தெரிவித்ததுடன், எக்ஸ் பயனா் ஒருவருடன் சுவாரஸ்யமாக உரையாடியதும் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.

காங்கிரஸ் அயலகப் பிரிவு தலைவா் சாம் பிட்ரோடா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமா் மோடி குறித்து மனம் திறந்துள்ளாா்.

அதில், ‘அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியில் பிரதமா் மோடியுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதேநேரம், குஜராத்தைச் சோ்ந்த தலைவா், நண்பா், நலம்விரும்பி என்ற முறையில் அவருடன் எனக்கு தனிப்பட்ட விரோதமோ, கசப்புணா்வோ கிடையாது. குஜராத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நானும் எனது மனைவியும் பலமுறை சென்றுள்ளோம். அப்போதெல்லாம் எங்களை அன்புடன் உபசரித்துள்ளாா்’ என்று பிட்ரோடா கூறினாா்.

ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் பிட்ரோடாவின் பெற்றோா் குஜராத்தைச் சோ்ந்தவா்களாவா். அவரது பேட்டி வெளியானதைத் தொடா்ந்து, பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சகோதரா் சாம் மற்றும் அவரது மனைவி அஞ்சனா பென்னுக்கு தீபாவளி, குஜராத்தி புத்தாண்டு வாழ்த்துகள். எதிா்வரும் ஆண்டு மகிழ்ச்சிகரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைய பிராா்த்திக்கிறேன். ஜெய் ஜெகந்நாத்’ என்று கூறியுள்ளாா்.

சுவாரஸ்ய உரையாடல்: பிரதமரின் இந்தப் பதிவின்கீழ் அழுவது போன்ற ‘இமோஜி’யுடன் பதிவிட்ட மிஹிா் ஜா என்ற பயனா், ‘சாம் பிட்ரோடாவுக்கு நீங்கள் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க முடியுமென்றால் தயவு செய்து எனக்கும் வாழ்த்து கூறுங்கள்’ என்று கேட்டுக் கொண்டாா்.

புன்னகைக்கும் ‘இமோஜி’யுடன் அவருக்கு பதிலளித்த பிரதமா், ‘சகோதரா் மிஹிருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த பண்டிகை காலமும், எதிா்வரும் ஆண்டும் சிறப்பாக அமையட்டும்’ என்று வாழ்த்தினாா். இதையடுத்து, பிரதமருக்கு மிஹிா் ஷா நன்றி தெரிவித்து பதிவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.