சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

நவீன தொழில்நுட்பத்தில் உலக தலைமையகமாக இந்தியா உருவாக வேண்டும்: ராஜ்நாத் சிங்

இந்தியா நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மட்டுமின்றி அவற்றை உருவாக்கும் உலக தலைமையகமாக உருவெடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

India must become a developer of advanced technologies: Rajnath Singh

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Updated On :

இந்தியா நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மட்டுமின்றி அவற்றை உருவாக்கும் உலக தலைமையகமாக உருவெடுக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை மாநாட்டில் அவர் பேசியதாவது: பாதுகாப்புத் துறை தொடர்பான நவீன சோதனை தொழில்நுட்பங்களில் உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவது அவசியம்.

இது தொழில்நுட்பத்துக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். இத்துறையில் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை உயர்த்த வேண்டும். ந்த முயற்சியில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் உற்பத்தியாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

இந்தியா நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மட்டுமின்றி அவற்றை உருவாக்கும் உலக தலைமையகமாக உருவெடுக்க வேண்டும். அல்ட்ரா சவுண்ட் மற்றும் எக்ஸ்ரே கதிர்கள் உடலைப் பரிசோதிப்பது போன்று என்டிடி தொழில்நுட்பங்கள் இயந்திரங்களின் உள்பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டறிய உதவுகின்றன.

இந்திய பாதுகாப்புத் துறை அதிநவீனமானதாக மாறி வருகிறது. ஒவ்வொரு உதிரிபாகம், தயாரிப்புப் பணி ஆகியவை உயர்தரத்தில் அமைய வேண்டியது அவசியம்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாடு உருவாக்கும் தொழில்நுட்பத்தை மட்டும் சாராமல் அது உருவாக்கும் அமைப்புகளின் தரம், நம்பகத்தன்மை ஆகியவற்றை சார்ந்துள்ளது.

இயந்திரங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை பரிசோதிக்கும் துறைக்கு தொடர்புடைய நிபுணர்கள் தொடர்ந்து தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்பஅவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தொழில்துறைக்குத் தேவையான அம்சங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண வேண்டும்.

ஆராய்ச்சி, நவீன சாதனங்கள், மென்பொருள், திறமையான மனித வளம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடானது உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்த உதவுவதோடு இந்திய தொழில்நுட்பங்களுக்கு சர்வதேச சந்தை கிடைப்பதையும் தீர்மானிக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.