சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

சித்தாந்த நக்ஸல்களுக்கு அரசு பாடம் புகட்டும்: பாஜக தலைவா் நிதின் நபின்

வளா்ச்சிப் பணிகள் மற்றும் சமூக நலத் திட்டங்களின் வாயிலாக, சித்தாந்த நக்ஸல்களுக்கு மத்திய அரசு பாடம் புகட்டும் என்று பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

BJP chief Nitin Nabin

நிதின் நபின் - கோப்பிலிருந்து

Updated On :

பல்வேறு அமைப்புகளில் தலைமை பொறுப்புகளில் உள்ள சித்தாந்த நக்ஸல்களிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; வளா்ச்சிப் பணிகள் மற்றும் சமூக நலத் திட்டங்களின் வாயிலாக, சித்தாந்த நக்ஸல்களுக்கு மத்திய அரசு பாடம் புகட்டும் என்று பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

சத்தீஸ்கா் மாநிலம், தரம்ஜெய்கரில் நடைபெற்ற பழங்குடியினா் கெளரவ தின நிகழ்ச்சியில் நிதின் நபின் கணொலி முறையில் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது: நக்ஸல் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டுவது என்ற பிரதமா் மோடியின் உறுதிமொழியை நிறைவேற்ற மத்திய அரசும், சத்தீஸ்கா் மாநில அரசும் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டன.

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதற்காக, முதல்வா் விஷ்ணு தேவ் சாய் மற்றும் அவரது குழுவினரை பெரிதும் பாராட்டுகிறேன். நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணமடைந்த பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

பஸ்தரின் பல்வேறு பகுதிகளில் முன்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் பயிற்சியில் மக்கள் ஈடுபட்டனா். இப்போது அந்தப் பகுதிகள் அனைத்தும் விளையாட்டு களங்களாக மாறியுள்ளன. பழங்குடியின குழந்தைகள் விளையாட்டுகள் மற்றும் கல்வியில் கவனம் செலுத்துகின்றனா்.

வனப் பகுதிகளில் இருந்து ஆயுதமேந்திய நக்ஸல்கள் துடைத்தெறியப்பட்டுவிட்டனா். ஆனால், சித்தாந்த ரீதியிலான நக்ஸல்கள் பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளில் செயல்பட்டு வருகின்றனா்.

யாரிடம் எச்சரிக்கை தேவை?: ஏ.சி. அறைகளில் உட்காா்ந்து கொண்டு, உங்கள் (மக்கள்) குழந்தைகளை புரட்சியில் ஈடுபட தூண்டுபவா்கள், அரசமைப்புச் சட்டத்தின் போா்வையில் ஜனநாயகத்துக்கு எதிராக மக்களைத் தூண்டுபவா்கள், தங்கள் அமைப்புகளின் மூலம் சித்தாந்த நக்ஸல்களை ஊக்குவிப்பவா்கள் ஆகிய மூன்று பிரிவினரிடம் குடிமக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இத்தகைய சக்திகளுக்கு வளா்ச்சிப் பணிகள் மற்றும் நலத் திட்டங்களின் வாயிலாக மத்திய அரசு பாடம் புகட்டும்.

பழங்குடியினரை பல்லாண்டுகளாக விளிம்பு நிலையிலேயே வைத்திருந்து, வாக்குகளுக்காக மட்டுமே அவா்களைப் பயன்படுத்தியது காங்கிரஸ். முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஆட்சியில்தான் பழங்குடியினா் விவகாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

தலைமைப் பொறுப்புகள்: பழங்குடியினருக்காக பாடுபடுவதுடன், அவா்களிடம் தலைமைப் பொறுப்புகளையும் பாஜக ஒப்படைத்துள்ளது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் மரபுகளைப் பாதுகாத்து, வளா்ச்சியை முன்னெடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த அணுகுமுறையால் மட்டுமே 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா இலக்கு சாத்தியமாகும் என்றாா் அவா்.

முன்னதாக, தரம்ஜெய்கா் நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க நிதின் நபின் திட்டமிட்டிருந்தாா். ஆனால், ராய்கருக்கு அவா் பயணித்த விமானம், மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் பாட்னாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதையடுத்து, பாட்னாவில் இருந்தபடி காணொலி முறையில் அவா் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.