உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல்! தொகுதிப் பங்கீடு பேச்சு: குழு அமைத்தது காங்கிரஸ்
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் ‘இண்டி’ கூட்டணி போட்டியிடும் என்று அறிவித்துள்ள காங்கிரஸ், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தைக் குழுவை அமைத்துள்ளது.

ராகுல் காந்தியுடன் அகிலேஷ் யாதவ். - கோப்புப்படம்
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் ‘இண்டி’ கூட்டணி போட்டியிடும் என்று அறிவித்துள்ள காங்கிரஸ், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தைக் குழுவை அமைத்துள்ளது.
பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் களமிறங்கியுள்ளது.
சமாஜவாதி-காங்கிரஸ் அடங்கிய இண்டி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சில் இழுபறி நீடிக்கிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 181 இடங்களை காங்கிரஸ் கோரி வருகிறது. குறைந்தபட்சம் 100 தொகுதிகள் என்பது காங்கிரஸின் இலக்காக உள்ளது.
இந்நிலையில், தில்லியில் உள்ள காா்கே இல்லத்தில் உத்தர பிரதேச தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த தலைவா்கள் கே.சி.வேணுகோபால், ராஜேந்திர பால் கௌதம், உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவா் ஆராதனா மிஸ்ரா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
ஆலோசனைக்குப் பிறகு சமூக ஊடகத்தில் காா்கே வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேச தோ்தல் உத்திகள், வெற்றி வாய்ப்புள்ள இடங்கள், பிரசார திட்டங்கள் குறித்து ஆவோசனை நடத்தப்பட்டது. உத்தர பிரதேச மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள். எதிா்க்கட்சிகள் சாா்பில் போட்டியிடும் ‘இண்டி’ கூட்டணி மக்களுக்கு நல்ல மாற்றத்தைத் தரும். பாஜகவை நிச்சயமாக வீழ்த்துவோம்’ என்று கூறியுள்ளாா்.
டிசம்பா் முதல் முழுவீச்சில் தோ்தல் பிரசாரத்தில் களமிறங்குவது என்றும், பிரியங்கா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் அடங்கிய தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தைக் குழு அமைக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

