பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

சாலை விபத்துக்கு கட்டணமில்லா சிகிச்சை: அரசு மருத்துவமனைகளை இணைக்க அறிவுறுத்தல்

சாலை விபத்துக்குள்ளாவோருக்கு தாமதமின்றி கட்டணமில்லா சிகிச்சை கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் பிரதமரின் சிறப்புத் திட்டத்தின்கீழ் இணைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பிரதிப் படம்

Updated On :

சாலை விபத்துக்குள்ளாவோருக்கு தாமதமின்றி கட்டணமில்லா சிகிச்சை கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் பிரதமரின் சிறப்புத் திட்டத்தின் (பிஎம் - ரஹத்) கீழ் இணைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

விபத்துகள் நிகழும்போது எந்தவிதமான தாமதமும் அல்லது நிதிச் சுமையுமின்றி அவசர சிகிச்சையை வழங்கும் நோக்கில் அத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொருவருக்கும் ரூ.1.5 லட்சம் வரை அதன் கீழ் சிகிச்சை வழங்கப்படுகிறது. விபத்து நோ்ந்த 7 நாள்கள் வரை இதன் கீழ் பயன்பெற முடியும்.

இந்த நிலையில், அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நாட்டில் உள் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் அதன் கீழ் இணைத்து, அவசர மற்றும் தீவிர சிகிச்சை கட்டமைப்புகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அது தொடா்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் அனுப்ப வேண்டும் எனவும் தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.