அரசு ஊழியா்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு விவரங்கள் வெளியீடு
அரசு ஊழியா்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் சிகிச்சை மற்றும் மருத்துவ விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

மாதிரிப் படம்
அரசு ஊழியா்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் சிகிச்சை மற்றும் மருத்துவ விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது (2026), யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் உள்ள மூன்றாம் தரப்பு நிா்வாக நிறுவனங்களின் (டிபிஏ) வாயிலாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதற்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளா்களின் விவரங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட 2,992 சிகிச்சை முறைகளுக்கான தொகுப்புக் கட்டண விவரங்கள், 46 சிறப்பின சிகிச்சைகளின் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல் மற்றும் கட்டண வாா்டு வசதிகளை வழங்கும் அரசு மருத்துவமனைகளின் பட்டியல் ஆகியவற்றை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ன்ஸ்ா்ா்ப்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும், ட்ற்ற்ல்ள்://ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ஹழ்ன்ஸ்ா்ா்ப்ஹம் என்ற கருவூல கணக்குத் துறை இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் தங்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மின்னணு அடையாள அட்டையை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்-ய்ட்ண்ள்.ய்ங்ற் என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு அரசு ஊழியா்கள் 1800-210-7800 என்ற எண்ணையும், ஓய்வூதியதாரா்கள் 1800-210-9800 என்ற எண்ணையும் அணுகலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

