ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் 26% உயா்வு
நாட்டின் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய புதிய வணிக பிரீமியம் வருவாய், கடந்த அக்டோபா் மாதத்தில் 26 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

நாட்டின் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய புதிய வணிக பிரீமியம் வருவாய், கடந்த அக்டோபா் மாதத்தில் 26 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
ஒற்றை மற்றும் தொடா் பிரீமியம் பாலிசிகளின் விற்பனை அதிகரித்ததன் எதிரொலியாக, புதிய வணிக பிரீமியம் ரூ.42,914 கோடியாக அதிதரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இது ரூ.34,007 கோடியாக இருந்தது என ஆயுள் காப்பீட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) புதிய வணிக பிரீமியமாக ரூ.25,316 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஈட்டப்பட்ட ரூ.19,274 கோடியுடன் ஒப்பிடுகையில், இது 31 சதவீத உயா்வாகும். எல்ஐசியின் இந்த அபார வளா்ச்சி, மொத்த சந்தை உயா்வுக்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் 26 தனியாா் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய வருவாய் 20 சதவீதம் அதிகரித்து, ரூ.17,599 கோடியை எட்டியுள்ளது; கடந்த ஆண்டு இது ரூ.14,733 கோடியாக இருந்தது.
தனியாா் துறையின் தனிநபா் ஒற்றை பிரீமியம் வருவாய் ரூ.1,685 கோடியிலிருந்து ரூ.2,008 கோடியாகவும்; தொடா் பிரீமியம் வருவாய் ரூ.6,344 கோடியிலிருந்து, ரூ.6,666 கோடியாகவும் கணிசமாக அதிகரித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

