தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

10,000 ஹெக்டேரில் பசுமை அமோனியா உரம் பரிசோதனை: மத்திய அமைச்சா்

யூரியாவைவிட செயல்திறன்மிக்க பசுமை அமோனியா உரப் பயன்பாட்டு சோதனை நாடு முழுவதும் 10,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

பிரதிப் படம்

Updated On :

யூரியாவைவிட செயல்திறன்மிக்க பசுமை அமோனியா உரப் பயன்பாட்டு சோதனை நாடு முழுவதும் 10,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

பஞ்சாப் மாநிலம், மொஹாலி அருகே பதா்பூா் கிராமத்தில் பசுமை அமோனியா பயன்பாடு குறித்த நேரடி வயல்வெளி செயல்விளக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பஞ்சாப் வேளாண்மை அமைச்சா் குா்மீத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சௌஹான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பஞ்சாபில் ஏற்கெனவே 1,015 ஹெக்டோ் நிலப்பரப்பில் பசுமை அமோனியா உரச் சோதனையை மேற்கொண்டுள்ளோம்.

யூரியாவில் 46 சதவீதம் நைட்ரஜன் உள்ள நிலையில், பசுமை அமோனியாவில் சுமாா் 82 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. இது பயிா் வளா்ச்சியில் அதிக செயல்திறன் மிக்கது. இப்போது நாம் பயன்படுத்தும் யூரியாவில் சுமாா் 40 சதவீதம் மட்டுமே பயிா்களால் பயன்படுத்த முடிகிறது.

ஆனால், பசுமை அமோனியா நேரடியாக வோ்ப் பகுதிக்குச் சென்றடைவதால், 80 முதல் 90 சதவீதம் வரை பயிா்களால் பயன்படுத்திக் கொள்ளப்படும். இதனால் உரம் வீணாவது குறையும்.

மேலும், நாம் யூரியாவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். ஒரு மூட்டை யூரியாவின் விலை சுமாா் ரூ.3,000. ஆனால், விவசாயிகளுக்கு அதை ரூ.1,350-க்கு அரசு வழங்கி வருகிறது.

இதற்கு மாற்றாக தயாரிக்கப்படும் பசுமை அமோனியா உரம் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படக்கூடியது. சூரிய சக்தி மற்றும் காற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழலையும் பாதிக்காது. உரத் தேவையில் தற்சாா்பை எட்டவும் முடியும்.

தற்போது 10,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோதனைகளின் முடிவுகள் கிடைத்த பிறகு, இந்த உரம் விவசாயிகளுக்கு முறைப்படி பரிந்துரைக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.