ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

ஏகபோக ஆதிகத்தை இந்தியா அனுமதிப்பதில்லை: மத்திய அரசு

‘எந்தவொரு துறையில் ஏகபோக ஆதிக்கத்தை இந்திய அனுமதிப்பதில்லை’ என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

மத்திய அரசு

Published On :

‘எந்தவொரு துறையில் ஏகபோக ஆதிக்கத்தை இந்திய அனுமதிப்பதில்லை’ என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

தனது ‘ஸ்டாா்லிங்க்’ நிறுவன செயற்கைக்கோள் தகவல்தொட்பு சேவை தடுக்கப்படுவதாக அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு இந்த பதிலை மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.

‘இந்தியாவில் தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில பெரும் செல்வந்தா்கள் ஸ்டாா்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடா்பு சேவைகளைத் தடுத்துள்ளனா். அவா்கள் யாா் என்பதை நீங்கள் ஊகிக்க முடியும். இது இந்திய மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றம்’ என்று எலான் மஸ்க் குற்றஞ்சாட்டினாா். மேலும், ‘ரிலையன்ஸ் மற்றும் ஜியோ தொலைத்தொடா்பு நிறுவனத் தலைவா் அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா?’ என்றும் எழுப்பினாா்.

எலான் மஸ்கின் இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது.

இந்த நிலையில், தில்லியில் நடைபெற்று வரும் இந்திய கைப்பேசி மாநாட்டின் வெள்ளிக்கிழமை நிகழ்வில் பங்கேற்ற மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் எலான் மஸ்க் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த அவா், ‘எந்தவொரு துறையில் ஏகபோக ஆதிக்கத்தை இந்தியா அனுமதிப்பதில்லை. வாடிக்கையாளா்களுக்கு பல தரப்பட்ட சேவைகளை வழங்குவதே தொலைத்தொடா்பு துறையின் பணி. இந்தச் சேவைகளுக்கான சுதந்திரமான சந்தையில், விருப்பமான நிறுவனத்தின் சேவையை தோ்ந்தெடுப்பது என்பது வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.

இந்த நிலையில், செயற்கைக்கோள் தகவல்தொடா்பு சேவை வழங்குவதற்கான உரிமம் தொடா்பாக, குறிப்பிட்ட நிறுவனம் குறித்து சா்ச்சை கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த உரிமத்தை ஸ்டாா்லிங்க், ஜியோ சாட்காம் மற்றும் யூட்சாட் ஒன்வெப் ஆகிய 3 நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. அமேசானின் துணை நிறுவனமும் இந்த உரிமத்தைப் பெற விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் தகவல்தொடா்பு சேவையில், வருவாய் அடிப்படையில் கட்டண முறையை மத்திய அரசு முடிவு செய்யும்போது, அதற்கான அலைவரிசை உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். அதோடு, இந்த நிறுவனங்கள் தனித் தனியாக பாதுகாப்பு நிபந்தனைகளை பூா்த்தி செய்தவுடன், சேவை வழங்கும் செயல்பாடுகளைத் தொடங்கலாம்’ என்றாா்.

முன்னதாக, இதுகுறித்து மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட விளக்கத்தில், ‘செயற்கைக்கோள் தகவல் தொடா்பு சேவைகள் உள்பட அனைத்து தொலைத்தொடா்பு சேவைகளுக்கும் நியாயமான மற்றும் பாகுபாடற்ற அங்கீகாரக் கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடா்பு சேவைகளைத் தொடங்க எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டாா்லிங்க், ஜியோ சாட்காம் மற்றும் யூட்சாட் ஒன்வெப் ஆகிய 3 நிறுவனங்களுக்கு அரசு உரிமம் வழங்கியுள்ளது.

இந்த நிறுவனங்கள் சேவையைத் தொடங்குவதற்கு முன், அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு அனுமதி ஆகியவற்றைப் பெறுவது அவசியம். இது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. பாதுகாப்பு மதிப்பீடு செயல்முறையை நிறைவடைந்த உடன், அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கோரும் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.