சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

வார்த்தைப் போர்! அன்புக்குரிய பிரதமர் அம்பானி, என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்! எலான் மஸ்க்

அன்புக்குரிய பிரதமர் அம்பானி, என்னுடைய மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என எலான் மஸ்க் பதிவு

எலான் மஸ்க், முகேஷ் அம்பானி.

எலான் மஸ்க், முகேஷ் அம்பானி.

Published On :

இந்தியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ நிறுவனத்தின் செயற்கைக்கோள் தகவல்தொடா்பு சேவைகள் தடுக்கப்படுவதாக, அந்த நிறுவனத்தின் நிறுவனரும் அமெரிக்கத் தொழிலதிபருமான எலான் மஸ்க், மத்திய அரசுக்கு எதிராக வார்த்தைப் போர் தொடுத்து வருகிறார்.

இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவையை நிறுவ, இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் தடுப்பதாக குற்றம்சாட்டியிருந்த எலான் மஸ்க், நேற்று நள்ளிரவில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார்.

எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அன்புக்குரிய பிரதமர் அம்பானி, நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான தலைவர் என்பதை உணராமல் இருந்ததற்காக என்னுடைய மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்திய மக்கள் மீது, உங்களது ஏகபோக சுரண்டலை மேற்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள், இருப்பினும், ஸ்டார்லிங்க் (Starlink) போட்டியிட அனுமதிப்பது குறித்து நீங்கள் பரிசீலிப்பீர்களா? என்று பதிவிட்டிருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் எலான் மஸ்க் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அதில், ‘இந்தியாவில் தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில பெரும் செல்வந்தா்கள் ஸ்டாா்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடா்பு சேவைகளைத் தடுக்கிறார்கள். அவா்கள் யாா் என்பதை மக்களே ஊகிக்க முடியும். இது இந்திய மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் சுரண்டல் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு, எலான் மஸ்க் பெயரைக் குறிப்பிடாமல், மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. ‘நாட்டில் உள்ள செயற்கைக்கோள் சேவைகள் உள்பட அனைத்து தொலைத்தொடா்பு சேவைகளுக்கும் நியாயமான, பாகுபாடற்ற நடைமுறைகள் அமலில் உள்ளன. இந்த விதிமுறைகளை நிறுவனங்கள் முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

மீண்டும் எலான் மஸ்க் இது குறித்து வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவு பேசுபொருளாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.