தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

‘ஸ்டார்லிங்க் திட்டத்தைத் தடுக்கும் இந்திய செல்வந்தர்கள்’... எலான் மஸ்க்கின் மறைமுகத் தாக்குதல்!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் திட்டத்தை பெரும் செல்வந்தர்கள் தடுப்பதாக எலான் மஸ்க் மறைமுகமாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி...

எலான் மஸ்க் - (கோப்புப் படம்)

Published On :8 அக்டோபர் 2026, 11:07 am IST

இந்தியாவில் ஸ்டார்லிங்க் திட்டத்தை பெரும் செல்வந்தர்கள் தடுப்பதாக எலான் மஸ்க் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் மொபைல்போன் சிக்னல் இல்லாத இடங்களுக்கும் செயற்கைகோள் வாயிலாக இணையதள சேவைகளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு முதல்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை விரைவாக முடிக்கும் பணியில் ஸ்டார்லிங்க் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் திட்டத்தை பெரும் செல்வந்தர்கள் தடுப்பதாக எலான் மஸ்க் மறைமுகமாக குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் எக்ஸ் பக்கத்தில் டாஜ் டிசைனர் என்ற பயனர், “மே 2026 நிலவரப்படி, இந்தியாவில் 11,256 கிராமங்களில் இன்னும் 4ஜி சேவை கிடைக்கவில்லை. இந்தியாவில் மார்ச் 2026 நிலவரப்படி, 109 கோடி இணையதள சேவை பயனாளர்கள் இருக்கின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் 44 கோடி பேர் மட்டுமே படுத்துகின்றனர்.

இந்தியாவின் நகர்ப்புறப் பகுதிகளில் சராசரியாக 100 பேருக்கு 126 இணைதளப் பயனர்கள் இருக்கும் நிலையில், அதோடு ஒப்பிடுகையில், கிராமப்புறப் பகுதிகளில் 100 பேருக்கு 48.31 ஆக இருக்கிறது.

பாரத்நெட் 8,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமான ஃபைபர் கேபிள்களைப் பதித்து, சுமார் 2,21,000 கிராமப் பஞ்சாயத்துகளில் இணையதள சேவைகளை வழங்கியிருக்கிறது. ஜூன் 2026-ல் 80,472 கிராமப் பஞ்சாயத்துகளில் மட்டுமே இவை செயல்பாட்டில் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில் பேசிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் வணிக செயல்பாடுகளின் துணைத் தலைவர் லாரன் டிரேடிரின், ஸ்டார்லிங்க் ஏற்கனவே இந்தியாவில் 20 கேட்வேக்களை அமைத்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். ஸ்டார்லிங்க் தனது சேவையைத் தொடங்குவதற்கு தேவையானவற்றை மத்திய அரசு செய்ய வேண்டும்” என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவை மறுப்பதிவிட்ட எலான் மஸ்க், “துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, சில செல்வந்தர்கள் எங்களைத் தடுத்து வருகின்றனர். உங்களுக்கே தெரியும் அவர்கள் யாரென்று... இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் எலான் மஸ்க்கின் பெயரைக் குறிப்பிடாத மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம், “இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” என்று விளக்கம் அளித்து குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Summary

The government said security assessments are under way for all three licensees before spectrum can be assigned, rejecting claims of discriminatory treatment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.