மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

அம்பானி இந்தியாவின் முதலாளியா? எலான் மஸ்க் கடும் தாக்கு

முகேஷ் அம்பானி குறித்து எலான் மஸ்க் விமர்சித்தது பற்றி...

Elon Musk | Mukesh Ambani

எலான் மஸ்க் | முகேஷ் அம்பானி - கோப்புப் படம்

Published On :

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவை உள்ளே நுழையவிடாமல் முகேஷ் அம்பானிதான் தடுத்து நிறுத்துவதாக எலான் மஸ்க் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இணையதள சேவை வழங்கப்படுவதை சில செல்வந்தர்கள் தடுத்து வருவதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், குடிமக்களின் நலன்களைவிட, தன்னுடைய கூட்டாளி முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதில்தான் அரசு அதிக கவனம் செலுத்துவதாக எக்ஸ் பயனர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கு பதில் கூறி மறுபதிவிட்ட எலான் மஸ்க், "165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் நிறுவனம் உரிமம் பெற்றதுடன், இந்திய அரசின் ஒவ்வொரு விதிமுறையையும் சட்டத்தையும் பின்பற்றி வருகிறது. இருப்பினும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை. அம்பானிதான் இந்தியாவின் முதலாளியா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, சில செல்வந்தர்கள் எங்களைத் தடுத்து வருகின்றனர். உங்களுக்கே தெரியும் அவர்கள் யாரென்று... இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்” என்றும் எலான் மஸ்க் புதன்கிழமையில் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் எலான் மஸ்க்கின் பெயரைக் குறிப்பிடாத மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம், “இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” என்று விளக்கமளித்து குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Summary

Elon Musk doubles down as govt rejects 'blocked entry' of Starlink charges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.