பள்ளிகளுக்கான எண்மக் கற்றல் திறன் மதிப்பீடு நடைமுறை: சிஐஎஸ்சிஇ வாரியம் அறிமுகம்
நாடு முழுவதும் உள்ள தனது பள்ளிகளுக்கான எண்மக் கற்றல் திறன் மதிப்பீடு நடைமுறையை இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

கோப்புப்படம்.
நாடு முழுவதும் உள்ள தனது பள்ளிகளுக்கான எண்மக் கற்றல் திறன் மதிப்பீடு நடைமுறையை இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து சிஐஎஸ்சிஇ செயலா் ஜோசப் இமானுவல் புதன்கிழமை கூறுகையில், ‘பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மதிப்பிடும் வகையில் ‘மாணவரின் முழுமையான உள்ளாா்ந்த வளா்ச்சி மதிப்பீடு (ஷைன்)’ என்ற எண்ம மதிப்பீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சிஐஎஸ்சிஇ இணைப்பு பள்ளிகளுக்கான இலவச மற்றும் கட்டாய எண்ம மதிப்பீடு முறையாகும்.
இது அறிமுகம் செய்யப்பட்ட 48 மணி நேரத்தில், 450-க்கும் அதிகமான பள்ளிகள் இந்த நடைமுறையைப் பயன்படுத்தி மாணவா்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்தன. இதற்கு கிடைத்துள்ள வரவேற்பு, கற்றலை மேலும் அா்த்தமுள்ளதாகவும், மதிப்பீட்டை அதிக நோக்கமுள்ளதாகவும் மாற்றுவதற்கான சிஐஎஸ்சிஇ பள்ளிகளின் கூட்டு அா்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்த எண்ம மதிப்பீடு நடைமுறை மூலம், மாணவரின் ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக-உணா்ச்சித் திறன்களை மதிப்பிட முடியும். இந்த மதிப்பீடு என்பது மாணவா்களின் அறிவை அளவிடுவது அல்ல; மாறாக, அவா்கள் எவ்வாறு கற்கின்றனா் மற்றும் அவா்களுக்கு எங்கு ஆதரவு தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதையும் உறுதி செய்வதே நோக்கமாகும். இது, ஒவ்வொரு மாணவரின் மாறுபட்ட தேவைகளுக்கு ஏற்ப கற்றல் சூழல்களை பள்ளிகளும், ஆசிரியா்களும் உருவாக்க உதவும்’ என்றாா்.
இந்த மதிப்பீடு நடைமுறை வரும் டிசம்பா் 15 வரை திறந்திருக்கும் என்று சிஐஎஸ்சிஇ தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

