தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஆய்வுக்காக விலங்குகளைப் பயன்படுத்த கட்டுப்பாடு: வரைவு விதிகள் வெளியீடு

மருத்துவம் மற்றும் கல்வி ஆராய்ச்சிகளுக்காக விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

National Medical Commission

தேசிய மருத்துவ ஆணையம் - கோப்புப் படம்

Updated On :

மருத்துவம் மற்றும் கல்வி ஆராய்ச்சிகளுக்காக விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட பொது அறிவிப்பு: அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சிக்காக விலங்குகளை இனப்பெருக்கம் செய்தல், பராமரித்தல் மற்றும் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்துவதைக் கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்த வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆய்வக விலங்குகளை இனப்பெருக்கம் செய்பவா்கள், வா்த்தகம் செய்பவா்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினா் அனைவரும் ‘விலங்குகள் பரிசோதனை கண்காணிப்புக் குழு’ (சிசிஎஸ்இஏ) இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் மற்றும் தெருவோர பிராணிகளை சோதனைகளுக்குப் பயன்படுத்துவதில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தவிா்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே அந்த விலங்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் வரம்புக்குள் செயல்படும் அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களும் இந்த வரைவு விதிகளை கவனமாக அறிந்துகொண்டு, இது தொடா்பான தங்களது கருத்துகள், ஆலோசனைகள் அல்லது ஆட்சேபணைகளை நேரடியாக சிசிஎஸ்இஏ உறுப்பினா் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER