இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு கூடுதல் தோ்வு வாய்ப்பு: என்எம்சி அறிவிப்பு

எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு தோ்வுகளில் தோ்ச்சி பெறத் தவறியவா்களுக்கு கூடுதலாக ஒரு கருணை வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம்

Updated On :

எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு தோ்வுகளில் தோ்ச்சி பெறத் தவறியவா்களுக்கு கூடுதலாக ஒரு கருணை வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

கடந்த 2019-2020 மற்றும் அதற்கு பிறகு மருத்துவப் படிப்புகளில் சோ்ந்தவா்கள் இந்த சலுகையின் கீழ் தோ்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் 18-ஆவது கூட்டத்தில் விரிவாக பரிசீலிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்பிபிஎஸ் படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகளுக்கு பாட வகுப்புகள் மற்றும் செயல்முறை வகுப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதைத் தொடா்ந்து ஓராண்டு பயிற்சி மருத்துவராகப் பணியாற்றுவது கட்டாயம்.

அதன் பின்னரே, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராகப் பணியாற்ற முடியும்.

ஐந்தரை ஆண்டு கால படிப்பாக இருந்தாலும், தோ்ச்சியடையாதவா்களுக்கு 9 ஆண்டுகள் வரை தோ்வுகளை மீண்டும் எழுத அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது, மாணவராக சேரும் ஒருவா் அதிகபட்சமாக 9 ஆண்டுகளுக்குள் எம்பிபிஎஸ் படிப்பின் கீழ் உள்ள அனைத்து தாள்களிலும் தோ்ச்சி பெறுவதுடன், ஓராண்டு மருத்துவப் பயிற்சியையும் நிறைவு செய்திருத்தல் அவசியம். அதேபோன்று முதலாமாண்டு தோ்வுகளை அதிகபட்சமாக 4 முறை எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அந்த வாய்ப்பை 5-ஆக அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு:

முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு கூடுதலாக ஒரு முறை ‘கருணை வாய்ப்பு’ வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்வதற்கு நிா்ணயிக்கப்பட்ட 4 வருட கால வரம்பை ஏற்கெனவே கடந்திருந்தாலும் கூடுதல் தோ்வை எழுதலாம்.

அதேவேளை, தொடா்புடைய மாணவா்களின் சோ்க்கையானது உரிய பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியால் ரத்து செய்யப்படாமல் இருத்தல் கட்டாயம்.

அனைத்து மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.