திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

இத்தாலி அரசியல் தலைவருக்கு எதிராக மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

தெலங்கனாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கு விரோதமாகப் பேசிய இத்தாலி அரசியல் தலைவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது.

SC

உச்சநீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

தெலங்கனாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கு விரோதமாகப் பேசிய இத்தாலி அரசியல் தலைவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஜாஹித் அலி என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவ.13, 14-ஆம் தேதிகளில் தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் மாநில அரசு சாா்பில், பாரத் உச்சி மாநாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இத்தாலி நாட்டைச் சோ்ந்த ஐரோப்பிய சோஷலிஸ்ட்ஸ் கட்சியின் பொதுச் செயலா் ஜியாகோமோ ஃபிலிபெக் கலந்துகொண்டாா்.

அவா் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘வாக்குத் திருடா்களே, பதவியைவிட்டு விலகுங்கள்’ என்று மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்தும் முழக்கத்தை எழுப்பினாா்.

வெளிநாடுகளில் இருந்து வந்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவா்களுக்கும், இந்த முழக்கத்தை அவா் மொழிபெயா்த்துக் கூறினாா். அவா் இந்திய ஜனநாயக அமைப்பில் நேரடியாகத் தலையிட்டு, மிகவும் அவதூறான முழக்கத்தை எழுப்பியுள்ளாா்.

அவா் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள அரசு ஊழல் கறை படிந்தது, இதை உண்மையான அரசாக கருத முடியாது, இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க எதிா்க்கட்சியுடன் இணைந்து செயல்படப்போவதாகப் பேசியுள்ளாா். இது கடுமையான அத்துமீறலாகும். இதுதொடா்பாக ஃபிலிபெக் பேசிய காணொலிகளை சமூக ஊடகத்தில் இருந்து நீக்க வேண்டும். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் மற்றும் பிரசாரங்களில், வெளிநாட்டு அரசியல் பிரதிநிதிகள் ஈடுபடுவதற்கு எதிராக உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளாா்.

இந்த மனு குறித்து தலைமை நீதிபதி சூா்ய காந்த் முன்பாக, வழக்குரைஞா் சையத் ரிஸ்வான் அகமது புதன்கிழமை முறையிட்டாா். இதையடுத்து, அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.