திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்கனிம வளங்கள் கொள்ளை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடிசிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த நவ. 22 வரை அவகாசம்

அடுத்த 25 நாள்களில் 52 லட்சம் திருமணங்கள்! ரூ. 7.5 லட்சம் கோடி வணிகம் எதிர்பார்ப்பு!

அடுத்த 25 நாள்களில் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

marriages

திருமணங்கள்

Updated On :

நாடு முழுவதும் அடுத்த 25 நாள்களில் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும்.

இதன் மூலம் சுமார் ரூ. 7.5 லட்சம் கோடி மதிப்பிலான வணிகம் நடைபெறும் என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது.

மார்கழி மாதத்தில் பெரும்பாலானோர் திருமணங்களை நடத்தமாட்டார்கள். அந்த மாதத்தில் சுபமுகூர்த்த நாள்களும் இல்லை என்பதால், அதற்கு முன்னதாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அடுத்தடுத்த முகூர்த்தங்களில் லட்சக்கணக்கான திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 25 நாள்களில் உணவு, நகை, ஜவுளி, விருந்தோம்பல், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பெருமளவிலான வணிகங்கள் நடைபெறும் என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தில்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் மட்டும் சுமார் 5 லட்சம் திருமணங்களும், ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்பிலான வணிகங்களும் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

25 மாநிலங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் மற்றும் 550 வணிகச் சங்கங்களுடனான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தத் தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த வணிகத்தில் சில்லறை விற்பனை மூலமாக மட்டும் ரூ. 4.05 லட்சம் கோடி வர்த்தகமாகும் என்றும், மீதமுள்ள 3.45 லட்சம் கோடி சேவைத் துறை மூலமாகமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த துறைகளில் எவ்வளவு?

நகை மற்றும் ஆபரணங்கள் - ரூ. 1.2 லட்சம் கோடி

ஜவுளி - ரூ. 90,000 கோடி

பரிசுகள், திருமண உபகரணங்கள், மளிகைப் பொருள்கள் - ரூ. 37,500 கோடி

உலர் பழங்கள், இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருள்கள் - ரூ. 30,000 கோடி

கேட்டரிங் மற்றும் சேவைகள் துறை - ரூ. 75,000 கோடி

ஹோட்டல்கள் மற்றும் மண்டபங்கள் - ரூ. 60,000 கோடி

அலங்காரம், நிகழ்வு மேலாண்மை (ஈவென்ட் மேனேஜ்மென்ட்) - ரூ. 37,500 கோடி

போக்குவரத்து, இசை மற்றும் பொழுதுபோக்கு - ரூ. 30,000 கோடி

புகைப்படம், காணொலிப் பதிவு, அழகு நிலையச் சேவைகள் - ரூ. 22,500 கோடி

Summary

52 lakh weddings in the next 25 days! Business worth Rs 7.5 lakh crore expected!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.