டாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!தமிழக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

உலகில் அதிக மக்களைக் கொண்ட மதமாக மாறும் இஸ்லாம்! எப்போது? எப்படி?

உலகில் அதிக மக்களைக் கொண்ட மதமாக இஸ்லாம் மாறப் போவதாக வெளியான ஆய்வு அறிக்கை பற்றி...

muslim

கோப்புப்படம் - AP

Updated On :

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட மதமாக இருக்கும் கிறிஸ்துவத்தை பின்னுக்குத் தள்ளி, 2035ஆம் ஆண்டுக்குள் இஸ்லாம் மதம் முதலிடத்தை பிடிக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

“உலகில் உள்ள மதங்களின் எதிர்காலம்” என்ற தலைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை

உலகிலுள்ள மற்ற முக்கிய மதங்களைக் காட்டிலும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

2020 - 2025 காலகட்டத்தில், ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு சராசரியாக 3.1 குழந்தைகளும், ஒரு கிறிஸ்துவ பெண்ணுக்கு சராசரியாக 2.5 குழந்தைகளும் பிறந்துள்ளது. மற்ற அனைத்து மதங்களைச் சேர்ந்த பெண்களைப் பொறுத்தவரை, இந்த சராசரி ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகளாக உள்ளது. பொதுவாக, ஒரு தலைமுறை தனது மக்கள்தொகையைத் தக்கவைத்துக் கொள்ள சராசரியாக 2.1 குழந்தைகள் விகிதம் தேவைப்படுகிறது.

முஸ்லிம் மக்கள் தொகையின் வளர்ச்சி, கிறிஸ்துவ மக்கள்தொகையின் வளர்ச்சியைத் தடுத்துவிடாது. இந்த இரு மதத்தின் மக்கள்தொகையும் அதிகரிக்கவே செய்யும். ஆனால், கிறிஸ்துவ மக்கள்தொகையைவிட முஸ்லிம் மக்கள்தொகை சற்று வேகமாக வளரும்.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஆகிய இரு மதத்தினருமே இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வேகமான வளர்ச்சியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 50 ஆண்டுகளில், அதாவது 2070 வரையிலான காலகட்டத்தில், இயற்கையான மக்கள் தொகை மாற்றத்தின் அடிப்படையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 160 கோடியும், கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 79.2 கோடியும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத மாற்றத்தின் தாக்கம்

மத மாற்றம் என்பது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இயற்கையான மக்கள்தொகை மாற்றத்தைவிட மிகக் குறைவான தாக்கத்தையே கொண்டிருக்கும்.

மத மாற்றத்தால் முஸ்லிம் மக்கள்தொகை 80 லட்சமும், கிறிஸ்துவ மக்கள்தொகை 10 கோடியும் குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மதத்திலிருந்து வெளியேறுபவர்களில் பெரும்பாலானோர், எந்த மதத்தையும் சாராதவர்களாக மாறக்கூடும்.

நாடுகள் வாரியாக முஸ்லிம் மத வளர்ச்சி

2070 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், உலக முஸ்லிம் மக்கள்தொகையில் ஏற்படும் வளர்ச்சியில் பெரும்பகுதி, ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலேயே நிகழ்வும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டில், உலக முஸ்லிம் மக்கள் தொகை 202 கோடியாக இருந்த நிலையில், முதல் 10 நாடுகளில் மட்டும் 131 கோடி பேர் வசித்தனர். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 65 சதவிகிதம் ஆகும்.

இந்தோனேசியாவில் 23.89 கோடி, பாகிஸ்தானில் 22.68 கோடி, இந்தியாவில் 21.30 கோடி, வங்கதேசத்தில் 15.14 கோடி, நைஜீரியாவில் 11.99 கோடி முஸ்லிம்கள் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், ஆய்வின்படி, 2070 ஆம் ஆண்டில், உலக முஸ்லிம் மக்கள் தொகை 363 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முதல் 10 நாடுகளின் மக்கள்தொகை மட்டும் 218 கோடியாக மாறும். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 60 சதவிகிதமாக இருக்கும்.

2070-ல் இந்தோனேசியாவைப் பின்னுக்குத் தள்ளி 46.10 கோடி முஸ்லிம் மக்கள்தொகையுடன் பாகிஸ்தான் முதலிடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா 33.36 கோடி, நைஜீரியா 28.21 கோடி என அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும்.

உலகளவில் அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இந்தியா மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள்தொகையில் 12.7 சதவிகிதத்தை பாகிஸ்தானும், 9.2 சதவிகிதத்தை இந்தியாவும் கொண்டிருக்கும்.

பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தரவுகள் அடிப்படையில்...

பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தரவுகள் அடிப்படையில்... - Photo: Dinamani / Gemini AI

இந்தியா

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஹிந்துக்கள் 79 சதவிகிதமாகவும், முஸ்லிம்கள் 15 சதவிகிதமாகவும் உள்ளனர்.

இதே விகிதம், 2070 ஆம் ஆண்டில், ஹிந்துக்கள் 76 சதவிகிதமாகவும், முஸ்லிம்கள் 20 சதவிகிதமாகவும் மாறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Summary

Islam is set to become the world's largest religion! When? And how?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.