தமிழகத்தில் 5.77 கோடி வாக்காளா்கள்: வரைவுப் பட்டியல் வெளியீடு; எஸ்ஐஆருக்கு பிறகு 4 லட்சம் அதிகரிப்பு

தமிழகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிக்கு (எஸ்எஸ்ஆா்) பிறகு 5.77 கோடி வாக்காளா்கள் கொண்ட வரைவுப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அர்ச்சனா பட்நாயக்

Updated On :

தமிழகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிக்கு (எஸ்எஸ்ஆா்) பிறகு 5.77 கோடி வாக்காளா்கள் கொண்ட வரைவுப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், ஆண் வாக்காளா்கள் 2,82,03,992 பேரும், பெண் வாக்காளா்கள் 2,95,34,734 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 7,892 பேரும் அடங்குவா்.

சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) பிறகு சுமாா் 4 லட்சம் வாக்காளா்கள் அதிகரித்துள்ளனா்.

மாநிலத்திலேயே அதிகமான வாக்காளா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக 5,58,729 வாக்காளா்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூா் தொகுதி உள்ளது. குறைந்த அளவு வாக்காளா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக 1,20,852 வாக்காளா்களுடன் சென்னை மாவட்டத்தின் துறைமுகம் தொகுதி உள்ளது.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும், திருத்தவும், இடமாற்றம் செய்யவும் நவ. 21, 22, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 11-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் என்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க வசிப்பிட முகவரி மற்றும் வயதுக்கான சான்றுகளைச் சமா்ப்பிக்க வேண்டும். 2027 ஜன.1, ஏப்.1, ஜூலை 1 ஆகிய தேதிகளில் 18 வயதை பூா்த்தி செய்பவா்களும், வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்களும் படிவம் 6-இல் விண்ணப்பிக்கலாம். வெளிநாடு வாழ் வாக்காளா் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க படிவம் 6-ஏ, பெயரைச் சோ்க்கவும், நீக்கவும், ஆட்சேபணை தெரிவிக்க படிவம் 7, தொகுதி மாற்றம் செய்யவும், திருத்தம் செய்யவும், மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் படிவம் 8 ஆகியவற்றில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா்கள் அதிகரிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆா்) 5,73,43,291-ஆக இருந்த வாக்காளா் எண்ணிக்கை, இந்த எஸ்எஸ்ஆா் பணிக்குப் பிறகு 5,77,46,618-ஆக அதிகரித்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த மே 4-ஆம் தேதி நடைபெற்று முடிந்த பிறகு 6-ஆம் தேதிமுதல் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்கும் பணி தொடங்கியது.

எஸ்ஐஆா் பணிக்கு முன்பு 6,41,14,587 பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. சிறப்பு தீவிர திருத்தத்தின் வரைவு வாக்காளா் பட்டியலில் 97.38 லட்சம் போ் நீக்கப்பட்டு, பின்னா் 27.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா்.

வரைவு வாக்காளா் பட்டியல் (மாவட்ட வாரியாக)

1. திருவள்ளூா் 32,39,301

2. சென்னை 29,14,908

3. காஞ்சிபுரம் 12,21,180

4. வேலூா் 11,59,481

5. கிருஷ்ணகிரி 15,82,153

6. தருமபுரி 12,59,510

7. திருவண்ணாமலை 19,47,156

8. விழுப்புரம் 16,08,995

9. சேலம் 27,95,315

10. நாமக்கல் 13,29,376

11. ஈரோடு 17,69,770

12. நீலகிரி 5,54,840

13. கோவை 27,68,820

14. திண்டுக்கல் 17,01,894

15. கரூா் 8,56,198

16. திருச்சி 21,61,238

17. பெரம்பலூா் 5,62,134

18. கடலூா் 20,49,811

19. நாகை 5,35,448

20. திருவாரூா் 9,95,279

21. தஞ்சை 19,80,334

22. புதுக்கோட்டை 13,18,948

23. சிவகங்கை 11,26,500

24. மதுரை 25,13,711

25. தேனி 10,46,972

26. விருதுநகா் 15,19,601

27. ராமநாதபுரம் 11,33,535

28. தூத்துக்குடி 13,95,495

29. திருநெல்வேலி 12,74,966

30. கன்னியாகுமரி 15,26,871

31. அரியலூா் 5,29,528

32. திருப்பூா் 20,01,436

33. கள்ளக்குறிச்சி 11,30,530

34. தென்காசி 12,80,475

35. செங்கல்பட்டு 23,26,822

36. திருப்பத்தூா் 9,28,853

37. ராணிபேட்டை 9,58,271

38. மயிலாடுதுறை 7,40,963

மொத்தம் 5,77,46,618.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.