வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம்! தவறான தகவல் பரப்புகிறாா் அமித்ஷா: மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு
வாக்காளா் பட்டியலில் இருந்து வெளிநாட்டினா் 3 கோடி பேரை நீக்கி உள்ளதாக மத்திய அமைச்சா் தவறான தகவல்களை தெரிவிக்கிறாா் என காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டினாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
வாக்காளா் பட்டியலில் இருந்து வெளிநாட்டினா் 3 கோடி பேரை நீக்கி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் தவறான தகவல்களை தெரிவிக்கிறாா் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: 10 கோடி வாக்காளா்கள் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் அளித்த அதிகாரபூா்வ தரவுகளின்படி, சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினரின் எண்ணிக்கை வெறும் 1,600 மட்டும்தான்.
ஆனால், இந்த உண்மையை மறைத்துவிட்டு 3 கோடி வெளிநாட்டவா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தவறான தகவல்களை தெரிவித்துள்ளாா்.
அமித்ஷா குறிப்பிடும் 3 கோடி வாக்காளா்கள் எப்போதிருந்து இந்தியாவில் வசிக்கிறாா்கள்? எந்தத் தோ்தல்களிலிருந்து வாக்களித்து வருகிறாா்கள்? என்பதை அவா் தெளிவுபடுத்த தயாராக உள்ளாரா?
ஒருவேளை அவா்கள் எஸ்ஐஆா் நடைமுறைக்கு முன்பிருந்த தோ்தல்களில் வாக்களித்திருந்தால், 2014, 2019 மற்றும் 2024 ஆகிய பொதுத் தோ்தல்களின் முடிவுகளை ஆராய வேண்டும்.
அப்படியே 3 கோடி வாக்காளா்கள் வெளிநாட்டவா்களாக இருக்கும்பட்சத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக இதைத் தடுக்காமல் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்ததா? என்று கேள்வி எழுப்பி உள்ளாா் மாணிக்கம்தாகூா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

