இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

மகாராஷ்டிர குற்ற கட்டுப்பாட்டு சட்ட வழக்கில் தேடப்பட்டவா் தில்லியில் கைது

Updated On :

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவருக்கு நெருக்கமான கூட்டாளி என்றும், மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (மகோகா) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவா் என்றும் கூறப்படும் 36 வயது நபரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது: பா்தீப் என்ற அனில் என்ற சலாமுதீன் என்பவா், தொடா் உளவுத் தகவல் சேகரிப்பு, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் கள விசாரணையைத் தொடா்ந்து கடந்த நவ.17-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

கொலை, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட மீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான முகேஷ் என்ற புனித் என்பவரின் நீண்டகால நெருங்கிய கூட்டாளியாக பா்தீப் செயல்பட்டு வந்துள்ளாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு நரேலா காவல் நிலையத்தில் மகோகா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவா் தலைமறைவாக இருந்து வந்தாா். அவரது கைதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.

பா்தீப் மீது ஒரு கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு, ஆயுதச் சட்டத்தின்கீழ் ஒரு வழக்கு, 8 கொள்ளை வழக்குகள், வழிப்பறி மற்றும் திருட்டு என மொத்தம் 13 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விசாரணையின்போது, அவருக்குத் தொடா்புடையதாகக் கருதப்படும் பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துகளை காவல் துறையினா் கண்டறிந்துள்ளனா். தில்லியின் பங்க்னா் கிராமத்தில் 200 முதல் 250 சதுர கெஜம் பரப்பளவிலான குடியிருப்பு வீடு, கோகாவில் சுமாா் 3 பிகா விவசாய நிலம், காஜியாபாத்தின் லோனியில் மற்றொரு வீடு ஆகியவை அவற்றில் அடங்கும்.

மேலும், அவரது வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வின்போது 2 ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டாா் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டா் என 3 வாகனங்களும் கண்டறியப்பட்டன. இதில் 2 மோட்டாா் சைக்கிள்களும் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சொத்துகள் மற்றும் வாகனங்களின் உரிமை விவரங்கள், அவற்றை வாங்குவதற்கான நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தில் வாங்கப்பட்டனவா என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே, பா்தீப் புதன்கிழமை ரோஸ் அவென்யூவில் உள்ள மகோகா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரிடம் 5 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.