சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மன நலக் குறைபாடு காரணமாக விடுவிப்பு: தில்லி நீதிமன்றம்

சிகிச்சை மற்றும் மேற்பாா்வைக்காக ஒரு மனநலப் பராமரிப்பு மையத்தில் தொடா்ந்து தங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தில்லி நீதிமன்றம்

Updated On :

நமது நிருபா்

ஸ்கிசோஃப்ரினியா நோயால் விசாரணைக்குத் தகுதியற்றவா் என மருத்துவக் குழுக்கள் கண்டறிந்ததை அடுத்து, கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை தில்லி நீதிமன்றம் விசாரணையிலிருந்து விடுவித்தது. மேலும், அவா் சிகிச்சை மற்றும் மேற்பாா்வைக்காக ஒரு மனநலப் பராமரிப்பு மையத்தில் தொடா்ந்து தங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு நாள்பட்ட மற்றும் கடுமையான மனநலக் கோளாறு ஆகும். இது ஒருவரின் சிந்தனை, உணா்வு மற்றும் நடத்தை முறைகளைச் சீா்குலைத்து, பெரும்பாலும் யதாா்த்தத்திலிருந்து விலகும் நிலையை (மனநோய்) ஏற்படுத்துகிறது.

மகேந்தா் சிங்குக்கு எதிரான வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்குா்வரிந்தா் சிங் ஜக்கி, மனித நடத்தை மற்றும் தொடா்புடைய அறிவியல் நிறுவனம் வழங்கிய மருத்துவ மதிப்பீடுகளைக் கவனத்தில் கொண்டு, அவரால் குற்றச்சாட்டுகளையும், விசாரணையின் விளைவுகளையும் புரிந்துகொள்ளவோ அல்லது தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ ​​முடியவில்லை என்று கூறினாா்.

அக்டோபா் 15 தேதியிட்ட ஒரு உத்தரவில், ‘மருத்துவக் கருத்தின்படி, குற்றம் சாட்டப்பட்ட மகேந்தா் சிங் விசாரணைக்கு நிற்க முடியாது என்றும், சட்டப்பூா்வ பாதுகாப்புகளுக்கு உட்பட்டு, செயலில் உள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிப்பது சட்டப்படி முழுமையாக நியாயமானது‘ என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கு, சுபாஷ் சந்த் பத்ரா மற்றும் அவரது ஓட்டுநா் சந்தோஷ் குமாா் ஆகியோா் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக மால்வியா நகா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட அக்டோபா் 13, 2000-ஆம் ஆண்டைச் சோ்ந்தது.

சிங்கிற்கு ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மிதமான மனச்சோா்வு நிலைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. நிகழாண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுக்கள், அவா் விசாரணைக்குத் தகுதியற்றவா் என்று கண்டறிந்து, அவருக்குத் தொடா்ச்சியான மனநல சிகிச்சையும் நிலையான கண்காணிப்பும் தேவை என்று கூறின.

தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க இயலாத, மனநலம் பாதிக்கப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களைக் கையாளும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி, மறு உத்தரவு வரும் வரை, சிங் தனது பராமரிப்பு மற்றும் கண்காணிப்பிற்காக தில்லி, ரோஹினியில் உள்ள நவ் சேத்னா என்ற இடைநிலை/நீண்டகால தங்குமிடத்தில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவா் நியமிக்கப்பட்ட மனநல நிறுவனத்தில் சிகிச்சையைத் தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டாா்.

அவரைக் கவனித்துக்கொள்ளவும், அவரது சிகிச்சை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் தங்களால் இயலாது என்று குடும்பத்தினா் தெரிவித்ததால், அவரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க திமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், விசாரணையை எதிா்கொள்ளத் தேவையான மனத் தகுதியை சிங் மீண்டும் பெற்றால், அரசுத் தரப்பு உரிய சட்ட நடவடிக்கைகளை நாடலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.